திங்கள், 16 ஏப்ரல், 2012

ஈழத்தாள்வான்

இந்த சிறுகதையை புரிந்துக்கொள்ள, 'பொன்னியின் செல்வன்' படிக்காத என் நண்பர்களுக்கு, பின்வரும் கதாப்பாதிரங்களின் அறிமுகம் மிக அவசியம்.

ரவிதாசன் & சோமன் சாம்பவன்:
பாண்டிய நாட்டு சதிகாரர்கள்.

பழுவூர் ராணி நந்தினி தேவி: பெரிய பழுவேட்டரையரின் மனைவி. ஆதித்த கரிகாலனை பழிவாங்குவதர்க்காக சபதம் செய்திருப்பவள்.

ஆழ்வார்க்கடியான் / வைஷ்ணவன்: சோழ நாட்டின் முதலமைச்சர், அன்பில் அநிருத்தரின் அந்தரங்கத் தூதன்.

சுந்தரச்சோழர்: சோழநாட்டை ஆண்டுக்கொண்டிருக்கும் மன்னன்.

அருள்மொழிவர்மன்: சுந்தரச்சோழரின் இளம் புதல்வன், பிற்காலத்தில் ராஜ ராஜச் சோழன்

ஆதித்த கரிகாலன்: அருள்மொழிவர்மனின் அண்ணன்.

ஊமை ஸ்திரீ: மந்தாகினி - இவர் வரலாற்றைப் படிக்க, பொன்னியின் செல்வன் புத்தகத்தையே படிங்களேன், ப்ளீஸ்! இல்லையென்றால் சுவாரசியமாகவே இருக்காது!


இக்கதை ஒரு கற்பனை


ரவிதாசனும் சோமன் சாம்பவனும் அனுராதபுரத்தின் அருகில் இருந்த அடர்ந்தக்காட்டுப்பாதையில் விரைவாக ஓடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் ஓடுவதைப் பார்த்தால் யாரோ துரத்துவது போல் தெரிந்தது. ஆமாம், அவர்கள் அந்த ஈழக் காட்டில் முன்னும் பின்னும் தெரியாமல் ஓடிக்கொண்டிருந்தார்கள். அவர்களை துரத்திக்கொண்டு படை வீரர்கள் மூவர், வேலும் வாள்களும்  கைகளில் பிடித்தவாறு ஆரவாரம் செய்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

"அடே சோமா.. இந்த சோழ வீரர்கள் மிக கொடுமைக்காரர்கள்.. எவ்வளவு விரைவாக ஓடினாலும், பின்னே வந்துவிடுகிரார்களே?", என்றான் ரவிதாசன்.

"மந்திரவாதி.. அவர்கள் கொடூரமானவர்கள் தான்.. அனால், இப்போது நாம் தப்பிக்கும் வழியை தேடுவோம்..அதோ, அந்த புதர் தெரிகிறதா? வாருங்கள் ஒளியலாம். இந்த முக்கில் திரும்பினால் அவர்களால் நம்மை பார்க்க இயலாது. சீக்கிரம்.. வாங்கள்..", என்றான் சோமன்.

குறுகிய பாதை ஒரு பாறையின் தருவாயில் திரும்பியது. அதற்க்கு எதிர்மாறான திசையில் ஒரு பெரும் புதர் காணப்பட்டது. அந்த்தக் காட்டில் நிறைய புதர்கள் இருந்ததால், இது தனித்து விளங்கவில்லை. ஆகையால் ஒளிவதற்கு இது ஒரு நல்ல இடம் என்றே நினைத்தான் சோமன்.

அனால் அதைக் கண்டவுடன் ரவிதாசனுக்கு சற்று பயம் உண்டாகிவிட்டது. இந்த புதரில் என்ன கொடும் ஜீவ ராசிகள் ஒளிந்திருக்குமோ என்று நினைத்து ஒரு நிமிடம் நடுங்கி நின்றான். இந்த திகைப்பை கவனித்த சோமன், ரவிதாசனை இழுத்துக் கொண்டு புதரில் தள்ளினான். அதிசயமாக அந்தப் புதரில் முள் செடி எதுவும் இல்லை.

"நல்ல யோகம், மெத்தை போலே இருக்கிறது அல்லவா?", என்றான் ரவிதாசன்.

"மந்திரவாதி, உம்!", என்று சோமன் தன் கையால் மந்திரவாதியின் வாயை மூடினான். 

சோமன் நினைத்தபடியே நடந்தது. வெறிகொண்ட சோழ வீரர்கள் இவர்கள் ஒளிந்திருந்த புதரின் எதிர் திசையை நோக்கி ஓடி விட்டார்கள். சிறிது நேரத்தில் மறைந்தே போனார்கள். இவ்வளவு அமைதியான காட்டை சோமன் தன் வாழ்நாளில் பார்த்ததில்லை. அனால், அந்த அமைதி நிலை நீடித்திருக்கவில்லை.

"சோமா.. நான் மந்திரவாதிதான்.. பாண்டிய நாட்டின் மிகச்சிறந்த மந்திரவாதி தான்.. அனால், நீ பெரும் புத்திசாலி..எல்லா இடத்திலும் பச்சை பசேலென்று இருக்கும் இக்காட்டில் ஒளிவதர்க்கான இடத்தை என்னால் தேட முடியவில்லையே? இவ்வளவு துல்லியமாக அபாயத்திலிருந்து என்னைக் காப்பாற்றினாய்! நீ வாழ்க, உன் குலம் வாழ்க! பா..", என்று மந்திரவாதி கூறுவதற்கு முன்னேயே சோமன் குறுக்கிட்டான்.  

"மந்திரவாதி..உளறுவதை நிறுத்துங்கள்! ஆறு தினம் நாம் எதுவும் உண்ணவே இல்லையே?.. அந்த பிரம்மையினால் இப்படி பிதற்றுகிறீர்கள்..", என்றான் சோமன்.  

"சரி தான்.. சோமா.. எனக்கு மிகவும் பசிக்கிறது.. நந்தினி தேவியின் சபதத்தை நிறைவேற்றவேண்டும் என்றால் நாம் உயிரோடு இருப்பது மிக முக்கியம். எங்கேயாவது உணவு கிடைக்குமா என்று பார்ப்போம்".

இருவரும் மெதுவாக அப்புதரிலிருந்து வெளியே வந்தார்கள். சோமன் எல்லா திசையிலும் பார்த்தான். சற்று தாங்கள் ஓடி வந்தப் பாதையிலிருந்து மேற்கு திசையை நோக்கி நடந்தார்கள். எல்லாத்திசையிலும் மரங்களால் மூடப்பட்டு காட்சி அளித்த காடு, இவர்கள் நடக்கையில் ஒரு குன்றை அடைந்தது. அங்கு மரங்கள் குறைவாக இருந்த காரணத்தால், சூரிய பகவான் நன்றாகவே காட்சி அளித்தார்.

"அப்பப்பா.. மதுரை வெய்யில் தான் சூடு என்று நினைத்தேன்.. ஈழம் வெய்யில் தாங்க முடிய வில்லை.."

"மந்திரவாதி.. பசி... அதுதான் பிரச்சனை..  எல்லாம் மங்கித் தெரிகிறது..."

"உண்மை சோமா. குடிக்க இருந்த தண்ணீர் கூட தீர்ந்துவிட்டதே! கொடுமை"

"நீங்கள் இங்கு சற்று அமருங்கள்", என்று சோமன் மந்திரவாதிக்கு ஒரு சிறு புல்ப்புதரைக் காண்பித்தான். மந்திரவாதி உடனே அமர்ந்து தனது இரு கைகளையும் தலை மீது வைத்துக்கொண்டு ஏதோ புலம்பிக்கொண்டிருந்தான். அப்புலம்பலை பொருட்படுத்தாமல் சோமன் இங்கும் அங்கும் எதாவது தெரிகிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தான். 

"அங்கே பாருங்கள் மந்திரவாதி..ஒரு  யானை வருகிறதே.."

"யானைப்பாகனும் தெரிகிறான்..புதரு தேடவேண்டும் போலிருக்கிறதே?"

"அதெல்லாம் வேண்டாம் ரவிதாசரே. அவன் ஒருவன் தான். நாம் இருவர். பகைவனாய் இருந்தால் அழித்துவிடுவோம். அதற்கு பிறகு, யானையை பயன்படுத்திக்கொள்ளலாம். வேண்டும் என்றால், இந்த யானையை வைத்தே அருள்மொழிவர்மனை கொன்று விடலாம்", என்று சோமன் தன் கையில் சிறு கத்தியை மறைத்துக் கொண்டான்.

"அருள்மொழியார் யார்? எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஏதோ செய் சோமா", என்றான் மந்திரவாதி.

சோமன் இந்த உளறலைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்டான். யானை நெருங்கி விட்டது. யானைப் பாகன் யானையின் காதுக்கருகில் ஏதோ கூறினான். பத்தடிக்கப்பால் யானை நின்றது. அவன் கீழே இறங்கி கம்பீரமாக நடந்து வந்தான். பல வருட உழைப்பினால் அவன் தேகம் மெருகேறியிருந்தது என்று தோன்றியது. சோமன் எதற்கும் தயாராகத்தான் இருந்தான்.
கையில் தடியுடன், சடா முடியுடன், ஒரு சிறு புன்னகையுடன் அந்த யானைப்பாகன் வந்து நின்றான். ரவிதாசன் இப்போது எழுந்து நிற்க முயற்சி செய்துக்கொண்டிருந்தான். அனால் அவனால் முடியவில்லை. பரிதாபமான பார்வை யானைப்பாகனின் கம்பீரமான முகத்தில் தெரிந்தது.

அதை கவனித்த சோமன், "யானைப் பாகா.. யார் அப்பனே நீ?"

"அய்யா, என் பெயர் ஈழத்தாள்வான். இங்கே அனுராதபுரம் ஆஸ்தான யானைப் பாகன் நான் தான். இவருக்கு என்ன ஆனது? உடம்பு சரியாக இல்லையா? "

"நாங்கள் உணவு உண்டு ஆறு நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. தண்ணீர் கூட குடிப்பதற்கு இல்லை. இந்த ஈழக்காட்டில் பேய் மாதிரி அலைந்துக்கொண்டிருக்கிறோம்", என்று சோகமான தொனியில் சோமன் கூறினான்.

"என்னே கொடுமை..நீங்கள் யார் என்று அடியேன் தெரிந்து கொள்ளலாமா? சற்றுமுன் உங்களை சோழ சூழ்ச்சமர்கள் துரதினார்களா?"

"ஈழா.. அது எப்படி உனக்கு தெரிந்தது? நீ யார்?", என்று கூறும்போது, சோமன் தன் கையில் இருந்த கத்தியை ஈழன் முகம் முன்பு நீட்டினான்.

ஈழனின் முகத்தில் பயத்திற்கான அறிகுறி தெரிந்தது. "அவசரப்பட்டுவிட்டோமோ?" என்று கூட சோமன் எண்ணினான்.

"என்னை ஒன்றும் செய்யாதீர்கள் அய்யா. யானை மேல் உட்கார்ந்து இந்த காட்டில் உலாவிக்கொண்டிருந்தேன். அப்போது தான் நீங்கள் ஓடுவதை கவனித்தேன். புதருக்குள் புகுந்ததையும் கவனித்தேன். இந்த சோழ படையினரால் உங்களுக்கு ஆபத்து என்று வந்தேன்."

"ஆஹா, சோழர்களுக்கு இங்கும் ஒரு பகைவனா? நான் உன்னை எப்படி நம்புவது?"

"அய்யா. சுந்தரச்சோழரின் சீடர்கள் இங்கு செய்யும் அக்கிரம்களை பார்க்கவில்லையா நீங்கள்? சரியா போச்சு போங்கள். எவ்வளவு புத்தர்சிலைகளை தரைமட்டம் ஆக்க்யிருக்கிரார்கள்! மூடர்கள். தாங்கள் நம்பவில்லை என்றால் சென்று வருகிறேன். என்னை விடுங்கள்."

"அடேயப்பா. என்ன துணிச்சல் அய்யா உனக்கு. நாங்கள் சோழ நாட்டு ஆட்களாக இருந்தால் என்ன செய்திருப்பாய்?", என்று கூறிக்கொண்டே ரவிதாசன் எப்படியோ எழுந்து நின்றான். 

"சாக்ஷாத் அருள்மொழிவர்மனே இங்கு வந்திருந்தால் இதைத் தான் சொல்லியிருப்பேன் ", என்றபோது சோமன் கத்தியை இறக்கி தனது இடுப்பில் பதுக்கிக்கொண்டான்.

ரவிதாசனும் சோமனும் சத்த்ம்  போட்டு சிரித்தார்கள். ரவிதாசன் ஈழனின் தோள் மீது கையைப் போட்டான். தன்னால் நிற்க முடியவில்லை, அதனால் ஈழனின் உதவியை நாடினான். சற்று ஆஜானுபாகுவாக தோற்றம் கொண்ட ரவிதாசன் யார் மீதாவது சாய்ந்தபடி நின்றால் உடல் பருமன் தாங்கமுடியாமல் கீழே விழுந்து விடுவார்கள். அனால் ஈழனின் ஒரு சதைக் கூட நகன்றவாறு தெரியவில்லை. கல் போன்றே நின்றான்.

"ஈழனே. நீ தான் உண்மையான வீரன். உன் கட்சியில் தான் நாங்கள் உள்ளோம். சுந்தரச்சோழரின் அக்கிரமங்களை கேள்வி கேட்கவே இங்கு அருள்மொழியாரை சந்திக்க வந்துள்ளோம். எங்களை உதவுவாயா?"

"நல்ல கேள்வி கேட்டீர்கள் அய்யா. உதவாமல் வேறு என்ன என்னால் செய்ய முடியும்? உங்களுக்கு இப்போது உணவு தேவை. வாருங்கள் என்னுடன்."

மூவரும் கஜேந்திரனை அணுகினார்கள். தலைகுனிந்து இருந்த கஜேந்திரன் மீது மூவரும் ஏரி அமர்ந்தார்கள். ஈழன் முன்பு போல் யானையிடம் ஏதோ கூறினான். கஜேந்திரன் விரைவாக நடந்தான்.

"ஈழா! மெதுவாகவே போ. சற்று பயமாக உள்ளது", என்றான் ரவிதாசன்.

"அய்யா. அருள்மொழியாரை சந்திக்க போகிறீர்கள் என்று சொல்லுகிறீர்கள், அனால் கஜேந்திரனை கண்டால் பயப்படுகிரீர்களே?"

"உனக்கு சற்று வாய் பேச்சு அதிகமாகவே இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு வைஷ்ணவன் உள்ளான் என்றால், இங்கு ஒரு ஈழத்தாள்வான். என்ன விந்தை! அவனைப்போல் நீயும் என்ன, சைவர்களுடன் சண்டை போடுவாயோ? ", என்று ரவிதாசன் கலீர் என்று சிரித்தான். மறுபடியும் சோமன் தன் தலையில் அடித்துக்கொண்டான். ஈழன் மௌனமாகவே இருந்தான்.

"என்ன அழகு வளம் மிகுந்த நாடு! உலகத்திலே மதுரை தான் சிறந்த இடம் என்று நினைத்தேன், அனால், ஈழம் வென்று விட்டது போல் தோன்றுகிறது", என்றான் ரவிதாசன்.

இவ்வளவு நேரம் பேசாமல் இருந்த ஈழன், "அய்யா, தாங்கள் பாண்டிய நாட்டவரா? மதுரையின் அழகைப்பற்றி சொல்லுங்களேன்?", என்றான்.

திடுக்கிட்ட சோமன், "இல்லை ஈழா, இந்த நேரத்தில் பாண்டிய நாடு என்றோ, சேர நாடு என்றோ எது உள்ளது? எல்லாம் இந்த சுந்தரச்சோழர் ஆட்சி தானே? மதுரையின் இயற்கையான அழகைப் பற்றி தான் மந்திரவாதி கூறுகிறார். நான் சொல்வது சரி தானே அய்யா?", என்று சாந்தமாகவே பேசினான்.

"ஆம்..ஆம்.. சோமா..சரி தான்.. என்ன விந்தை..", என்றான் மந்திரவாதி. தனது முட்டாள்தனத்தை நினைத்து தன்னையே திட்டிக்கொண்டான். இப்போது ஈழன் லேசாக சிரித்ததை யாரும் கவனிக்கவில்லை.

கஜேந்திரன் குன்றைத்தாண்டினான். அப்போது, எங்கிருந்தோ மாயம் செய்ததுப்போல் ஒரு மகா அருவி ஒன்று தெரிந்தது. ரவிதாசன் இதைக்கண்டு தெளிவு அடைந்துவிட்டான். பல நாட்களாக தண்ணீர் குடிக்காமல், உணவு உண்ணாமல் இருந்தவனுக்கு, இத்தண்ணீர் அற்புதத்தை, இயற்கையின் சீற்றத்தைப் பார்த்ததும் பூரிப்பாகிவிட்டது. சோமனுக்கும் இதே நினைப்பு உண்டாகிவிட்டது. அவனும் மனிதன் தானே பாவம்.

"அய்யா, அங்கு பாருங்கள். அந்த அருவி தெரிகிறதல்லவா? அங்கு தான் என் வீடு உள்ளது", என்றான் ஈழன்.

"என்னது, அருவி தான் வீடா? இப்போது யார் உளறுகிறார்கள் என்று சொல்லு சோமா?", என்று நகைத்தான் ரவிதாசன்.

"ஆமாம் அய்யா. அது தான் என் வீடு. குகை வீடு. கஜேந்திரா.. நில்லு இங்கே", என்று கர்ஜித்தான் ஈழன்.

மூவரும் கீழே இறங்கினார்கள். ஈழன், இருவரின் கையை பிடித்துக்கொண்டு பாறைகள் மீது மெதுவாக அழைத்துச் சென்றான். சூரிய பகவான் சுட்டெரிக்கும் இடத்தில் குளிர்ந்த நீர் சாரல் பாறைகளை ஈரமாக்கிக் கொண்டிருந்தது. அந்தப் பாறைகள் மீது கால்கள் பட்டதும் ரவிதாசனுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.குகைவீட்டிர்க்குள் புகுந்தார்கள்.

அதிசயமான அந்த மகா அருவியின் நீர் வீழ்ச்சியின் வலதுபுரத்திர்க்கு ஈழன் இவர்களை அழைத்துச் சென்றான். அங்கு ஒரு சிறு குகை தெரிந்தைக்கண்டு ரவிதாசனும் சோமனும் மெச்சிப் போனார்கள். என்ன அழகாக இருந்தது அந்த குகை. குகைக்குள் பிரவேசித்ததும் ஈழன் ஒரு புல் படுக்கையை விரித்தான். இருவரும் அமர்ந்தார்கள். மிகவும் குளுமையாக இருந்தது அந்த குகை. குகை சுவற்றிலே இருந்த சித்திரங்கள் மிக அழகாகவும் துல்லியமாகவும் செய்யப்பட்டதாகத் தெரிந்தது.

"பாண்டிய நாடு தோற்றது!", என்றே நினைத்தான் ரவிதாசன். இந்த முறை வெளியே சொல்லவில்லை!

"இங்கே  இருங்கள் அய்யா. நான் போய் என் அன்னையிடம்  உணவு வாங்கி வருகிறேன்"

"ஆகட்டும். சீக்கிரம் வா. பசிக்கிறது", என்றான் ரவிதாசன்.

சற்று உள்ளே சென்ற ஈழன் ஒரு முதுமைபிராட்டியிடம் கையால் செய்கைகள் செய்துக்கொண்டிருந்தான்.

"மந்திரவாதி. அதோ பாருங்கள். அந்த கிழவியை எங்கோ பார்த்த மாதிரி இல்லை?"

"அப்படி தோன்றவில்லை சோமா. முழுசாகவும் பார்க்க முடியவில்லை. அவர் பின்புறம் தானே தெரிகிறது? முழுசாக வந்து நின்னாலும் பசி மறைத்துவிடும் போலிருக்கிறது"

"இல்லை மந்திரவாதி. கண்டிப்பாக பார்த்திருக்கிறேன். இந்த சித்திரங்களைப் பாருங்கள். ஏதோ மர்மம் உள்ளது என்று என் உள் மனது கூறுகிறது"

அப்போது ஈழன் இரண்டு வாழை இலைகளுடன் வந்தான். இலைகளை கீழே வைத்து அதில் புளி சோற்றை கொட்டினான்.

"இந்தாங்கள் அய்யா.  கொஞ்சம் புளி சோறு தான் உள்ளது. மன்னிக்கவும்"

வெறிகொண்ட புலி தன் இறையை தின்பது போல் ரவிதாசனும் சோமனும் புளி சோற்றை புசிக்க ஆரம்பித்தார்கள். அவசரமாக சாப்பிட்டதால் சோமன் விக்கல் எடுக்க ஆரம்பித்தான். இதை கவனித்த ஈழன் அங்கு உள்ள மண் பானையை அணுகி தூக்கிப்பார்த்தான். அதில் தண்ணீர் ஒன்றும் இல்லை.

"தேன் நீர் முடிந்ததே! சற்று பொறுங்கள், கொண்டு வருகிறேன்", என்றான் ஈழன்.

"பொறு ஈழா. எங்கே போகிறாய்? இந்த அருவியில் இல்லாத தண்ணீரா?", என்றான் ரவிதாசன்.

"சரிதான் அய்யா. அருவியில் தண்ணீர் நிறைவாக உள்ளது சரிதான். ஆனால், அருவியின் உச்சியில் தான் தேன் நீர் உள்ளது. அதைக்குடித்தால் தான் விக்கல் நிற்கும்", என்றான் ஈழன்.

"அது என்ன அப்பா தேன் நீர்? அதை விடு. சோமன் விக்கி சாகமாட்டான். சற்று முன் உள்ளே உன் அன்னை இருக்கிறாள் என்று கூறினாயே, எங்கு போய்விட்டார்? நாங்கள் பார்க்கக் கூடாதா?", என்றான் ரவிதாசன்.

"கண்டிப்பாக பார்க்கலாம் அய்யா. ஆனால், அவருக்கு வாய் பேச முடியாது, காதும் கேட்காது"

"என்ன கொடுமை. அதனால் என்னப்பா? எங்கே போனார்கள்?"

"அய்யா அவருக்கு கூச்ச ஸ்வபாவம். அதனால் தான் பழங்களை பறிக்க சென்றுவிட்டார்"

"குகையின் பின்புறமாகவே வா?"

"ஆமாம். இந்த குகை அறையிலிருந்து காட்டிற்கு செல்லும் பாதை உள்ளது. அதன் வழி தான் சென்றார். நான் அழைத்துச் செல்கிறேன். முதலில் உணவு உண்ணுங்கள்"

"அப்படியா. விடு அப்பறம் பார்த்துக்கொள்கிறேன்."

அப்போது ஈழன் உள்ளே சென்று இரண்டு துணி மூட்டைகளை எடுத்து வந்தான். எங்கேயோ செல்வதற்காக ஆயத்தமாக இருந்தான்.

"அய்யா. இதை அடுத்த முறை பசிக்கும் போது சாப்பிடுங்கள்"

"உன் உதவிக்கு என்ன கைமாறு செய்யப் போகிறோம்? சோமா, அந்த தங்க மோதிரத்தை எடு", என்று ஒரு தங்க மோதிரத்தை ஈழநிடம் கொடுத்தான். சோமனுக்கு விக்கல் இன்னும் நிற்கவில்லை.

"ஆஹா. என்ன அழகான மோதிரம். இது என்ன பழுவூர் முத்திரையா?"

"மிக கெட்டிக்காரன் நீ. பழுவூர் முத்திரையே தான். எப்படி தெரிந்தது?"

"நந்தினி தேவி எனக்கு கடவுள். ஈழன் என்று அவரிடம் கூறிப்பாருங்கள். நன்கு அறிவார் என்னை"

"ஈழா. பழுவூர் ராணிக்கு உன்னை தெரியுமா? ஆஹா. என்ன நல்ல விஷயம்!"

"இப்போது தாங்கள் எங்கு செல்வதாக உத்தேசம்? வெய்யில் கொளுத்துகிறது. சற்று ஓய்வு எடுக்கவேண்டியது தானே? நானும் போய் தேன் நீர் நிரப்பிக்கொண்டு வருகிறேன்."

"நீ சொல்வதும் சரி. அருள்மொழியாரிடம் ஒரு மிக முக்கியமான சம்பாஷனை உள்ளது. இன்று இரவே செய்தாக வேண்டும்."

"அப்படியா? அப்போது நீங்கள் நன்கு ஓய்வெடுக்க வேண்டும். நான் போய் தேன் நீர் கொண்டு வருகிறேன். அது வரையில் தூங்குங்கள்."

"ஈழா. உன்னை பார்த்தால் மிகவும் வியப்பாக உள்ளது. அப்படியே ஆகட்டும். சென்று வா", என்றான் ரவிதாசன்.

ஈழன் குகை வாசலுக்குச் சென்றான். திரும்பிப்பார்த்து லேசாக சிரித்தான். இந்த முறை மந்திரவாதி அந்தச் சிரிப்பை கவனித்து விட்டான். ரவிதாசன் அவனை உற்றுப்பார்த்தான். அந்த காந்தக்கண்கள், சடாமுடி, நெரித்தப்புருவங்கள், வலிமையான தோள்கள், எங்கோ இவனைப்பார்த்த ஞாபகம் ரவிதாசனுக்கு வந்தது. ஏதோ மர்மம் இருக்கிறதென்ற நம்பிக்கை உறுதியானது. .

"ஈழனே.. நில். உன்னை எங்கேயோப் பார்த்தது போல் உள்ளதே? யார் நீ? "

லேசான சிரிப்பு கர்ஜனையாக மாறியது.

"ஏன் இப்படி சிரிக்கிறாய்?", என்றான் ரவிதாசன்.

"அய்யா, என்னை ஈழத்தாள்வான் என்று இங்குள்ள மக்கள் அன்பாக கூப்பிடுகிறார்கள்.  எனக்கு இன்னொரு பெயரும் உள்ளது. சீக்கிரம் அதை அறிவீர்கள்", என்று கூறியபடியே கஜேந்திரனிடம் விரைவாகச் சென்று ஏறிக்கொண்டான்.

சோமன் விக்கலுடனே வெடுக்கென்று எழுந்து குகையின் வெளியே வந்தான். எவ்வளவு வேகமாக ஈழன் ஓடியிருக்கவேண்டும்? சோமன் குகையின் வாசலிற்கு வருவதற்கு முன்னமே ஈழன் யானை மீது எரிக்கொண்டிருந்தான். இன்னும் ஒருமுறை இவர்களைப் பார்த்துவிட்டு யானையின் காதில் ஏதோக் கூறினான்.  கஜேந்திரன் மரணபயம் வந்ததுப்போல விரைந்து காட்டிற்குள் ஓடிவிட்டான். ஈழன் காட்டிற்குள் மறைந்தான்.

"மந்திரவாதி! நான் சந்தேகித்தது சரிதான். அங்கு பாருங்கள். பழுவூர் ராணியைப்போல் உருவம் கொண்ட ஸ்திரீ! அப்பா! என்ன விரைவாக ஓடுகிறாள்! ஈழனும் மறைந்து விட்டான். நாம் உண்ட உணவில் விஷம் இருக்கிறதா என்று பாருங்கள்..சீக்கிரம்.."

"சோமா! இல்லையே.. நல்ல சுவையாகத்தான் உள்ளது!!  இவ்வளவு நேரம் நாம் பேசிக்கொண்டிருந்தது.....?"

"சந்தேகமே இல்லை. அருள்மொழிவர்மர் தான்"

ரவிதாசனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. பீதியின் காரணமாக புளி சோறு ரவிதாசனின் தொண்டையை அடைத்தது. அது நஞ்சினால் உண்டானது என்று பயந்துப் போனான்.

அதே நேரம் சோமன், "ஆனால் மந்திரவாதி, என் விக்கல் நின்றுவிட்டது!", என்று கூறி லேசாக சிரித்தான்.   

அருள்மொழியார் நஞ்சு கொடுத்து பகைவர்களை கொல்லும் வீரர் கிடையாது என்பதை உணர சற்று நேரம் ஆனது.

ஞாயிறு, 4 மார்ச், 2012

ரிச் கெட் ரிச்சர்..புவர் கெட் புவரர்..

"டேய் ரங்கா... யார் கிட்டேந்து திருடலாம்?", ஒரு சிறிய அறையில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ரங்காவும் ராஜனும் எம்.சீ குவாட்டர் அடித்துக் கொண்டிருந்தார்கள்.

"இப்டி கேட்டா நான் என்ன சொல்றது டா? திருட நெனைக்க ஆரம்பிச்சுட்டோம், கஷ்ட காலம் மச்சி.."

"இதுல என்ன டா அவமானம். ஒலகத்துல யாரு திருடரதில்லை?"

"லாஜிக்ல அட்டாக் பண்ணிட்ட. மேல சொல்லு"

"நீ சீரியஸ் நா சொல்லு, நான் மேல பேசறேன்"

"சும்மா சொல்லு டா. ஒரு ரவுண்டு போடு, இந்தா", மடக் மடக்கென்று இரண்டு பேரும் அடித்தார்கள். அடித்தவுடன் பிளாஸ்டிக் பாக்கெட்டிலிருந்த ஊறுகாயை சுவைத்துக்கொண்டார்கள்.

"இதோ பாரு டா. நீயும் சரி, நானும் சரி, நல்லாதானே படிச்சோம்? கவர்மண்டு காலேஜ்ல பைசா குடுக்காம இஞ்சினீரிங் முடிச்சாச்சு. ஐ.டி கம்பனி கூட வேலை குடுத்தான். ரெண்டு பெரும் ஒர்ரே ஆபீஸ்ல தான் வேலை செஞ்சோம். என்ன மயித்த கண்டோம் அதுல?"

"ரைட்டு, ரைட்டு.. டன்சன் ஆவாதே டா. எமோஷன கட் பண்ணு"

இன்னொரு ரவுண்டு  உள்ளே போனது.

"ஆபீஸ் மொக்க இல்ல? வேலையாடா அது? ஏதோ ஒரு வெள்ளைக்காரனோட கடைல சிஸ்டம் வேலை செய்யலேன்னா, எஸ் சார், நோ சார், பக் பிக்ஸ் ரெடி சார்ன்னு மொக்க போடணும். அதுக்கு ஒரு மேனேஜர் வேற. ஒக்காளி. மேல என்ன நடக்குதுன்னே தெரியலை, வந்து ஆர்டர் போடுவான்"

"அதுனாலத் தானே வேலைய விட்டோம். அதாவது, பைசாக்குதான் மச்சி வால்யூ"

"கம்பனி பாலிடிக்ஸ் ஒரு பக்கம் டா. கூட வேல பாக்கறவங்க அலப்பறை தாங்க முடியல மச்சி. பேப்பர்ல இருக்கறத பாத்து பிரோக்ராம் தட்டரவனுக்கு எதுக்கு வெட்டி பந்தா? இதுல பொண்ணுங்க வேற. அவங்க வுடற சீன் தாங்க முடியல. ஏதோ அவங்கள சுத்தி தான் ஒலகமே ஓடுதுன்னு நெனப்பு வேற. நார்த் இந்தியால தான் இதெல்லாம் நடக்குதுன்னா, நம்ப ஊருலயும் இந்த கருமம்"

"டேய்..கற்றது தமிழ் டயலாக திருப்பி சொல்றயா? புதுசா சொல்லு டா"

இன்னொரு ரவுண்டு போனது.

"அணத்த விட்ரா. காசு அதிகமா இருந்தாலே ஒருத்தனையும் மதிகரதில்லை மச்சி. சாப்ட்வேர் வேலைய வுட்டுட்டு கட்டட வேலை செஞ்சோம். காசு கொஞ்சம் வந்தாலும் நம்மளால ஏதோ சந்தோசமா இருக்க முடியுது. நம்ம கூட வேலை பாக்கறவங்கள பாரு டா. என்ன பாத்ருகாங்க வாழ்க்கைல? அவங்க முன்னாடி சீன் வுட்டா அவங்க கடுப்பு ஆவாங்களா மாட்டாங்களா? அதான் திருடலாம்ன்னு சொல்றேன். இப்போ சொல்லு, யார் கிட்ட திருடலாம்?"

"ஹீ ஹீ.. மொதல்ல நாம இருக்கற சோசியல் டிவிஷனப்பத்தி சொல்லு பாப்போம்?"

"ஒ கே.. மொதல்ல சூப்பர் சொசைட்டி...பரம்பரை பணக்காரன்.. அவன லூசுல விடு.. புதுப் பணக்காரண புடி... நமக்குத் தெரிஞ்சே நூறு பேராவது இருப்பாங்க. அவங்கள தூக்குவோம் மச்சி"

"எப்டி தூகப்போறோம்? என்னத்த தூகப்போறோம்? நீ பைசா சுருட்டினாலும் இந்த மக்கள் வாங்கிப்பாங்களா?"

"கஷ்டம் தான். பட் என்ன பண்றது. கவர்மன்ட் செய்ய வேண்டிய வேலைய நம்ம செய்ய பாக்கறோம்"

"கவர்மன்ட் மேல இருந்த நம்பிக்கைலாம் எப்போவோ பறந்து போயாச்சு"

"செரியா சொன்ன. இன்னொரு ரவுண்டு ஊத்து"

"ஒன்னும் இல்ல ஊத்த. இந்தா, பீடி அடி", ரங்கா பீடியை கொளுத்தி ராஜனிடம் கொடுத்தான்.

"ரெண்டு பேறும் குடும்பங்கள எதித்துகிட்டு வெளில்ல வந்தாச்சு. அப்பன் மாமான்னு ஒரு உறவும் கடயாது. இத விட்டா வேற சான்ஸ் இல்லே டா. ரிஸ்க் எடுப்போமடா"

"ரிஸ்க்கு வந்து நமக்கு ரஸ்க்கு சாப்ட்ரா மாதிரி"

"பஞ்ச். தலைவர் பாபால்ல சொன்ன வசனம் தான் ஞாபகம் வருது டா. 'அப்பன் மாமா சித்தப்பா அத்தைன்னு உறவுல வேகரதோட, ரெண்டு கட்டு வெரகுல வெந்துட்டு போய்டலாம்'..என்ன டயலாக்!"

"ஒனக்கு ஏறிப் போச்சு ராஜா.. படுத்து தூங்கு, நாளைக்கு லோடு வந்துரும்"

"அது வரட்டும்டா...எவனா இருந்தாலும் வெட்டுவேன். நாளைக்கு பாரு.. சும்மா டக்குன்னு எழுந்திருப்பேன் பாரு"

"இந்த மாதிரி பஞ்ச் பேசியே நாசமா போறோம் டா நம்ம. ஒண்ணுத்தையும் மாத்த முடியாது நம்பளால"

"பாப்போமடா.."

"இல்லே இத சொல்லு நீ...யாருக்கூட நம்பள்ளுக்கு பிரச்சனையே இல்லேன்னு சொல்லு பாப்போம்? அவன் சம்பாதிக்கறான், அவன் ஏதோ சீன் விடறான். நம்ப எதுக்கு கண்டுக்கணும்? வுட்டு தள்ளு"

"டேய் ரங்கா, கடுப்பாகுது டா.."

"லூசுல விடு...நாளைக்கு பேசிக்கலாம்...இப்போ படு.."

ஒரு வழியாக இரண்டு பேரும் தூங்கி விட்டார்கள். காலையில் ராஜன் எழுந்தான், காலை ஆறு மணிக்கு. ரங்கன் இன்னும் தூங்கிக்கொண்டுதான் இருந்தான். தலை வலித்துக்கொண்டிருந்தது. இரண்டு டம்பளர் தண்ணீரைக் குடித்தான். 

"டேய் ரங்கா..எந்திரி டா.. மாணிக்கம் அண்ணே வந்துடுவாரு..."

ரங்கன் சோம்பல் முறித்துக்கொண்டு எழுந்தான். 

"என்ன ராஜா...நேத்து பேசினது எதாவது ஞாபகம் இருக்கா?"

"அப் கோர்ஸ்.. நமக்கு தேவை பைசா தானே.. அது எங்க பொழங்கிட்டிருக்குன்னு எனக்கு தெரியும். பைசா கைல வந்தா நாம நல்லது செய்யலாம்"

"எங்கேர்ந்து டா பைசா வரும்? இருந்த நல்ல வேலையும் வுட்டாச்சு.. இப்போ செங்கல் தூக்கிற்றுக்கோம். என்னத்த செய்ய?"

"நீ பீல் பண்ணாதே.. இந்த மாசம் மிச்ச சம்பளத்த வாங்கி இன்டர்நெட் செனட்டர் போவோம் வா"

"என்ன டா சொல்ற?"

"வா டா.. பார்கிளேஸ் பாங்கு ரெண்டு ஐ டி ஆளுங்கள தேடறாங்களாம். எக்சல் ஷீட்டு எடிட் பண்ண மாசம் ஒரு லட்சம் தராங்களாம். HR ஆளு நம்ப மகேஷ் தான். வேலை கடச்சா மாதிரி தான்"

"சரி டா.. பட் பாங்க்ல வேலை செஞ்சு நல்லது எப்படி செய்றது?"

"முட்டாள்...Investment பாங்க்ல எல்லாமே திருட்டு பணம் தான் டா..சூதாடி சுழண்ட பணம்.. அதுலேர்ந்து திருடரதுல தப்பு இல்லையே? வா திருடலாம்"

"ரங்கநாதா...காப்பாத்து.."

ஐந்து வருடங்கள் கழித்து...

தொலைப்பேசி அடித்தது. ரங்கா அதை எடுத்தான்.  

"ஹல்லோ..ரங்கநாதன் ஹியர், ஹூ இஸ் திஸ்?"

"டேய் ரங்கா, நான் ராஜ் டா..ராஜா"

"ராஜா... எப்டி டா இருக்க? வேர் தி ஹெல் ஆர் யு?"

"Deutsche Bank சிங்காப்பூர். AVP. நீ சிங்கபூருல இருக்கேன்னு என் Barcap எக்ஸ் கலீக் சொன்னான், தீபன் டா"

"ஒ, எஸ் எஸ்.. பிசினெஸ் ட்ரிப்"

"சூப்பர். லெட் அஸ் மீட் டுடே ஈவேனிங் மான்.. ஐ காட் எ ஹியூஜ் போனஸ், யு நோ? ஒரு பென்ட்லி கார் வாங்கிட்டேன் மான்.."

"ஆஸம்..எவ்ளோ டா?"

"முப்பது மில்லியன் டா.."

"ரியல்லி? சூப்பர்.. ஹ ஹ ஹா..", ரங்கன் சிரித்தான்.

"ஏன் டா சிரிக்கற?"

"ஒன்னும் இல்ல, பழஸ்ஸ நெனச்சேன்..விடு.. சிட்டி ஹால் Brotzeit அட் 6 "

"சுவர்.. சி யு தேர்..பாய் டா.."

ரங்கன் என்கிற ரங்கநாத சேஷாத்ரி தொலைப்பேசியை கீழே வைத்தான். ஆறு மணிக்கு அவன் நெருங்கிய நண்பனான ராஜாமணி அய்யரை சந்திக்கப்போவதை நினைத்து சந்தோஷப்பட்டான். 

வியாழன், 1 மார்ச், 2012

மஞ்சளைத் தொடவேண்டும்

ஊரே கடற்க்கரையில் திரண்டி இருந்தது. ஆடைகளே இல்லாத ஆண்கள்,  பெண்டிர்  "ஓலா, ஊலா" என்று எதையோப் பாடிக்கொண்டிருந்தார்கள். திருவிழாப்போலக் காட்சி அளித்தது அந்த இடம். அப்போது மாலை. மாலை என்று தான் எண்ணிக்கொள்ளவேண்டும், ஏனென்றால், நேரம் என்ற கணக்கே அந்த மனிதர்களுக்குத் தெரியாதே.

அவர்கள் ஆதிவாசிகள்.

வெளிச்சம் நன்றாக இருந்த வேளையில் எல்லோரும் கூட்டம் கூடி எரிந்துக்கொண்டிருக்கும் தீப்பந்ததிர்க்கு முன்னால் அமர்ந்தார்கள். குடிசைப் போன்று காட்சி அளித்த வீட்டிலிருந்து ஆஜானுபாகுவாக காட்சி அளித்த ஒன்று நடந்து நெருப்பை நோக்கி வந்துக்கொண்டிருந்தது. அது நெருங்கி வந்து விட்டது. இப்போதுப் பார்த்தால் தான் அது ஒரு அலி என்று தெரிகிறது.

ஒரு கூர்மையான வேல் போன்ற மர ஆயுதத்தை  இடது கையில் வைத்துக்கொண்டும், தலைமுடி கடற்க்கரை மணலை தடவிக்கொண்டும், மற்றொருக் கையில் ஒரு செத்தப்பாம்பினை எடுத்துக்கொண்டும் அக்கடர்க்கரை நகரின் தலைவரான அலிகள், அமர்ந்திருக்கும் மக்கள் முன் வந்து சேர்ந்தார். இப்போது அலைகள் சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது.

"ஜந்துக்களே.. நீங்கள் தயாரா?"

"ஆ...ஆ..", மக்கள் அலறல்.

"அடங்கட்டும், அடங்கட்டும். காட்டிற்குள் ஓடிப்போய் பிடித்த மிகப்பெரிய உணவுப்பண்டம் இது", சர்ப்பத்தை மக்கள் முகத்திற்கு முன்னால் ஆட்டினார் அலிகள்.

"ஆ...ஆ..", மக்கள் பூரித்தார்கள். கிள்ளிய வயிற்ரை உடையவர்களின் முகத்தில் அவலமானப்பார்வைகள். 

"இந்த உணவுப்பண்டம் யாருக்காக என்று தெரியுமா? ஆ....ஆ....ஆ...", என்று அலறினார். 

அதேக்கூறையிலிருந்து உறுமல் போன்று ஒரு சத்தம் கேட்க்க, வெடுக்கென்று ஒரு புலி வெளியே வந்தது. அதன் மேல் அமர்ந்திருந்தான் வீரன். கட்டுமஸ்தான உடம்போடு, தன் தலைமுடியை சாட்டையாக பயன்படுத்தி அப்புலியை செலுத்திக்கொண்டு மக்களை நோக்கி வந்துக்கொண்டிருந்தான். புலியை மக்களிடமிருந்து கொஞ்ச தூரத்தில் நிறுத்தி விட்டு, தன் முடியை அதன் கழுத்தில் கட்டி ஒரு முடிச்சு போட்டுவிட்டு, அலிகளை நோக்கி நடந்தான். அவன் முடி நீண்டுக்கொண்டே இருந்தது. என்ன அற்புதம் என்று மக்கள் வியப்போடுப் பார்த்துக்கொண்டிருந்தனர். அலிகள் முன் வந்து நின்றான். கீழே விழுந்து அலிகளின் கால்களை நக்க ஆரம்பித்தான்.

"போதும் வீரா. எழுந்திரு"

"அலிகளே.  உங்கள் அழகே அழகு"

"அது எனக்குத் தெரியாதா? இந்தா, இதை இப்போதே தின்று விடு"

"மிகவும் புதுமையாக இருக்கிறதே. என்ன இது அலிகளே?", சர்ப்பத்தை நோக்கி வினவினான்.

"இது வழுக்கும் உணவுப்பண்டம். வாங்கிக்கொள்", வீரனிடம் கொடுத்தார்.

"ஆஹா.. உண்மையாகவே வழுக்குகிறது இதைப்பிடித்தால். இப்போதே தின்று விடுகிறேன்"

தலைப்புரத்தை வெட்டி புலிக்கு தூக்கி எறிந்தான். பிறகு மிச்சம் இருக்கும் பாம்பை கொறிக்க ஆரம்பித்தான். அவன் துப்பியதை மக்கள் அடித்துப் பிடித்து எடுத்தார்கள். பிறகு சுவைத்து உண்பதற்காக தலைமுடிகளுக்குள் மறைத்துக்கொண்டார்கள். ஒரு வழியாக வீரன் தின்று முடித்தான்.

"இனிமேல், உன்னுடைய கடைசி பணியை முடித்து விடு. அதற்குப்பின், புறப்படு, மஞ்சளை தொட்டு விட"

"என்ன பணி அலிகளே?"

அலிகள் கைகளை இரண்டு முறை தட்டினார். ஐந்து  பெண்டிர்  குடிசைக்குள்ளிருந்து ஓடி வந்து அலிகள் முன்னால் நின்றார்கள்.

"பெண்டிரே. வீரனுக்கு சக்திஊட்டுங்கள். உம். இப்போதே", அலிகள் கத்தினார்.

உடனே பெண்டீர் வீரனின் உடலில் தங்கள் வாய்களை பரவ விட்டார்கள். [மீதி நடந்ததை நான் கூறவேண்டியதில்லை] கடைசி காரியமும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அப்போது அலிகள்,

"மக்களே. நான் முன்பு கூறியதுப் போல், இன்று ஒரு மகத்தான நாள். நம் வீரன் கடலுக்குப்பின் இருக்கும் மஞ்சளை தொட்டு வரப்போகிறான். தூரம் எவ்வளவு ஆனாலும் தொட்டு விடுவான். எனக்கு நம்பிக்கை உள்ளது. அதற்காகத்தான் வீரனுக்கு இந்த உபசரணை எல்லாம். என்ன வீரனே, சந்தோஷமாக உள்ளதா?"

"மிகவும் சந்தோஷம். மஞ்சளை நிச்சய்ம் தொட்டு விடுகிறேன். எனக்கு கொட்டான் பைகள் வேண்டும், எல்லோருக்கும் மஞ்சளை எடுத்து வர."

"தேவையில்லை வீரனே. ஒரு கைப்பிடி கொண்டு வா, போதும். இப்பெண்டீர்களின் வயிற்றில் வாய்க்கும் பிள்ளைகளுக்கு பூசி விட. அவ்வளவு நேரம் ஆகாது என்று நினைக்கிறேன்"

"அப்படியே ஆகட்டும் அலிகளே. சென்று வருகிறேன்", என்றுக் கூறி தன் முடியால் புலியை இழுத்தான்.

புலி தூக்காதில் இருந்ததுப் போல, எழுந்திருக்கவே கொஞ்ச நேரம் ஆகிவிட்டது. எப்படியோ புலியை இழுத்து அதன் மேல் உட்கார்ந்து கடலை நோக்கி சென்றான். மக்கள் எல்லோரும் முன்போல பாட ஆரம்பித்தார்கள்.

"மஞ்சளே, இதோ வருகிறேன்", என்று கூறி, மக்களை ஒரு முறை திரும்பிப்பார்த்துவிட்டு, புலியை செலுத்தினான். புலி நீந்த ஆரம்பித்தது. சிலைப்போல மக்கள் வீரனைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். வெளிச்சம் குறையக்குறைய அவன் கொஞ்சம் கொஞ்சமாய் காணாமலேப் போய்விட்டான்.

அமைதியான அந்த சூழ்நிலையில் அலிகள், "மக்களே, மஞ்சள் தூங்க சென்று விட்டது. சீக்கிரம் திரும்பி வரும். வீரன் நிச்சயம் தொட்டுவிடுவான். கவலைப்படாதீர்கள். உணவு உண்டு தூங்கக் செல்லுங்கள். யார் அங்கே! இன்று எனக்கு மூன்று பெண்களும், ஒரு ஆடவனும் நித்திரைப் பொழுதில் வேண்டும். அப்படியே குண்டு மீனைக் கொண்டுவந்து விடு. பசிக்கிறது", என்று கூறிய பிற்பாடு எல்லோரும் அந்த இடத்திலிருந்து விலகினார்கள்.

இருள் சூழ்ந்தது. மஞ்சள் மீண்டும் தோன்றியது. மக்கள் எல்லோரும் கடற்கரைக்கு ஓடினார்கள். வீரனைக் காணோம்.

அடுத்த மூன்று நாட்களும் இதே நடந்தது. அலிகள் பதற ஆரம்பித்தார்.

நான்காவது நாள், ஒரு ஆடவன் அலறியடித்துக்கொண்டு அலிகள் வசிக்கும் குடிசைக்குள் நுழைந்தான்.

"அலிகளே. புலி வந்துவிட்டது. புலி வந்து விட்டது"

"என்ன சொல்கிறாய். வீரன் எங்கே? மஞ்சள் எங்கே?"

"தெரியவில்லை அலிகளே. புலி தான் வந்திருக்கிறது. அனால் அது அசைய மாட்டேன்கிறது. செயலற்று இருக்கிறது, நம் கழுவாதையார்ப் போல"

"இதோ..எனக்கு பார்க்க வேண்டும்"

அலிகளும் அந்த ஆடவனும் ஓடினார்கள், கடற்கரைக்கு. மக்கள் திரண்டார்கள். அலிகள் படுத்திருந்தப் புலியைப்பார்த்தார். அருகே சென்றார். வாயிலிருந்து ஏதோ பச்சையாக வழிந்துக்கொண்டிருந்தது. என்ன வென்று அதன் வாயைத்திறந்தார். கையை உள்ளே விட்டு நோண்டினார். எதையோ கையில் எடுத்தார். வெளியே வந்தது சர்ப்பத்தின் தலை. என்ன ஆச்சர்யம் என்று அதை பக்கத்தில் இருக்கும் ஆடவனிடத்தில் கொடுத்தார்.

எழுந்து நின்று, "ஹ்ம்ம்.. ஒன்றும் வருத்தப்பட வேண்டாம். வீரன் தான் செய்தி அனுப்பியிருக்கான். மஞ்சளான இந்த புலி போல பல புலிகள் மஞ்சளில் இருக்கிறது என்றிருக்கிறான். அதற்க்கு உணவுப்பண்டங்கள் இல்லைப் போல. நல்ல செய்தி. என்ன செய்யலாம்?", யோசித்தார். தற்செயலாக, கீழேக்கிடந்த கட்டை ஒன்றை ஒரு சிறுவன் விட்டெறிந்தான்.  அந்த கட்டை மூழ்காமல் மிதக்க ஆரம்பித்தது. அலிகள் பக்கத்தில் இருக்கும் ஆடவனை நோக்கினார்.

"ஆஹா...தெரிந்தது. அதோப்பாருங்கள். மொட்டையா, காட்டிற்குள் போய் பல கட்டைகளை எடுத்துக்கொண்டு வா. நானும் மஞ்சளைத் தொட வேண்டும். அங்கிருக்கும் புலிகளுக்கு உணவுப்பண்டங்கள் எடுத்துச் செல்ல வேண்டும். வீரனே, நானும் வருகிறேன்", என்று கூறி உரக்க சிரித்தார்.

எல்லா மக்களும் ஆட ஆரம்பித்தார்கள். சில நாட்கள் கழித்து அலிகள் புறப்பட்டார். அதற்கடுத்த நாள், வீரன் கடற்கரைக்கு செயலற்று வந்து சேர்ந்தான்.

வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

லக்ஷ்மண்-ரேக்கா


கிழக்குத் தாம்பரம் ரயில் கேட் மூடப்படும் நேரம் அது. ராஜேஷ் மேற்குத் தாம்பரத்திலிருந்து விரைவாக தனது மோட்டார் வண்டியை ஓட்டிக்கொண்டு வந்துக்கொண்டிருந்தான். வெய்யில் பரம சூடாக இருந்தது. அணல் காற்று வேறு அடித்துக்கொண்டிருந்தது.

"எப்படியாவது சிக்னலைத் தாண்டிவிடவேண்டும்.. இல்லாட்டி ஆபீஸ் போய் சேரமுடியாது.. முருகா..காப்பாத்து..", என்று யோசித்துக்கொண்டு வண்டியை விர்ரென்று செலுத்தினான். சிக்னலை நெருங்கி விட்டான். இன்னும் பத்து வினாடிகள் போதும். ஆனால், அவன் நினைத்தது ஒன்று, நடந்தது வேறு. விதி. கேட் மெதுவாக மூடப்படுவதை கவனித்தான். வண்டி இன்னும் வேகமாக ஓடியது. ஒரு பேருந்து அவன் முன்னால் பட்டென்று பிரேக் அடித்து நின்றது.

"இனி ஒண்ணும் செய்யமுடியாது. பிரேக்கப் போடுடா முட்டாள்", அவன் வண்டி நின்றது. அடிக்கும் அணல்க்காற்றை விட அவன் மூச்சு சூடாகி விட்டது.

"என்ன கொடும சரவணா...புல் ஷிட்..", என்றபடியே வண்டியை அவன் இடதுபுறமிருந்த கரும்புச்சார் கடையை நோக்கி ஓரம்கட்டினான். கடை ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் இருந்தது. சற்று நிம்மதியாக இருந்தது ராஜேஷ்சுக்கு. கிங்க்ஸ் ஒன்றை கொளுத்தினான்.

"இந்த கொடும் வெயில்ல எப்படி தம் போட முடியுது தம்பி? கொஞ்சம் ஜூஸ் சாப்டுங்க", என்றார் கடைக்காரர்.

"இல்ல பாஸ். இப்போ எனக்கு இதான் துணை..வுடுங்க..  நானே கடுப்புல இருக்கேன்.."

"ஹீ ஹீ.. ரைட்டு..", என்றார் கடைக்காரர்.

வானத்தை நோக்கியபடி புஸ் புஸ் என்று புகையை ஊதினான். தன்னுடைய தோளை யாரோத் தொட்டார்கள். திடுக்கென்று திரும்பினான்.. ஒரு நிமிடம் ஆடிப்போனான்.. சிகரட் விரலை சுட்டது.. சிலைப்போல் நின்றவன் வெடுக்கென்று முடிந்த சிகரட்டை கீழே எறிந்தான்.. என்ன ஒரு சூடு...

"ஹாய்...ராஜேஷ்..", அவள் தீபிகா. ராஜேசுடைய கல்லூரி வாழ்க்கையின் ஒன் சைடு காதலி. கொச்சையாக சொல்லப்போனால், அவனுடைய சைட்டு. நம்பமுடியவில்லை அவனால்.

"ஹாய்.. தீபிகா? அதானே உன் பேர்?" [என்ன ஒரு நடிப்பு. அவளுக்கு தெரியாதா என்ன?]

"ஞாபகம் இருக்கா?" ஒரு சோகம் வழிகின்ற முகத்தில் எங்கேயோ, ஓரத்தில் ஒரு புன்முறுவல். அதைப்பார்க்கவில்லை ராஜேஷ். அவன் கண்ணுக்கு சோகம் தான் தெரிந்தது.

"என்ன திடீர்ன்னு? ஆச்சர்யமா இருக்கு உன்ன பாக்க. எப்டி இருக்க?"

அவன் சற்றும் எதிர்பாராத ஒன்று நடக்க ஆரம்பித்தது. தீபிகாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

"ஏன் அழற? எல்லாரும் பாக்கறாங்க. வா இப்டி", என்று அவளை கடையின் ஓரத்திற்கு அழைத்துச் சென்றான். இப்போது அவள் விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தாள்.

"ஏய்... தீபிகா.." ["என் கண்ணே.. என்ன ஆச்சு என் செல்லமே.." என்றது ஒரு மனசாட்சி. "சீ.. சாடிஸ்ட் டா நீ" இன்னொரு மனசாட்சி சொன்னது]

"பிளீஸ்.. அழாமச்சொல்லு..", லேசாக தன் கையை அவள் தோள் மீது உரிமையோடு போட்டான். தீபிகா ஒன்றும் சொல்லவில்லை. ["முருகா..நீ தான்  சாடிஸ்ட்"]

"நான் என்னோட வாழ்க்கைய வேஸ்ட் பண்ணிட்டேன். உன்ன காலேஜுல கண்டுக்கக்கூட இல்லை", என்றாள் தீபிகா. இவனுக்கு பேச்சு வரவில்லை.

"ஐ மீன்.. நீ என்ன காலேஜுல காதலிச்சது உண்மை தானே? சொல்லு ராஜேஷ்?"

"ஐ..ஐ..இப்போ எதுக்கு கேக்கற தீபிகா? மொதல்ல அழுகைய நிறுத்து. இந்தா, தொடச்சுக்கோ", அவள் தோளிலிருந்த கை தன் சட்டைப்பாக்கேட்டில் உள்ள கைக்குட்டையை நாடியது. ["இது தான் டா நீ மொதல்ல செஞ்சிருக்கணும்...ராஸ்கல்...சீப் பாஸ்டர்ட்.."]

அவள் துடைத்துக்கொண்டாள். டக்கென்று அவனைப்பார்த்து அபிநயமாக சிரித்தாள். ராஜேஷ் வேறு உலகத்தில் டூயட் பாட ஆரம்பித்துவிட்டான்.

"உன் கூட நெரிய பேசணும் ராஜேஷ். இப்போ பேசலேன்னா வேற எப்போவுமே பேச முடியாது.."

"தீபிகா.. எனக்கு ஒண்ணும் புரியமாட்டேன்குது.. இவ்ளோ நாள் எங்க இருந்த? என்ன ஆச்சு? காலேஜுல நான் சுத்தி சுத்தி வந்தப்போக்கூட நீ கண்டுகிட்டதே இல்லையே.. இப்போ எப்டி? நான் எத நம்பறது?"

"உன்ன பஸ்லேர்ந்துப் பாத்தேன். ரொம்ப வேகமா வண்டி ஓட்டாதே டா..", இவன் நெற்றியில் உள்ள வியர்வையை அதே கைக்குட்டையால் துடைத்தாள். ["என்ன சாமி நடக்குது இங்க?"]

"சரி.. சாயங்காலம் ஏழு மணிக்கு வசந்த பவன் மாடி AC ஹோட்டலுக்கு வந்துடு. நான் பேசணும். மனசு விட்டுப்பேசணும். நிச்சயம் வருவ தானே? இப்போ எனக்கு டைம் இல்லை. அதனாலத்தான் சொல்றேன்"

"அப் கோர்ஸ் தீபிகா.. நிச்சயம் வரேன்"

பச் என்று அவன் நெற்றியில் முத்தமிட்டு அங்கிருந்து விரைவாக மறைந்துவிட்டாள்.  இவன் சிலைப்போல அவள் காணாமல் போகும்வரைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"தம்பி, இப்போவாவது ஜூஸ் சாப்டுங்க. என்ன?"

"ஹ... செரி குடுங்க பாஸ்.. என்ன நடக்குதுன்னே தெரியல", இன்னொரு கிங்க்ஸ் சிகரட்டை கொளுத்தினான். கேட் துறந்து விட்டது. ஜூசும் வந்தது. மடக் மடக்கென்று ஜூசைக்குடித்துவிட்டு கடைக்காரருக்கு ஐம்பது ருபாய் நோட்டை நீட்டினான். மிச்சக்காசை வாங்குவதற்கு முன்பே சிட்டுப்போல வண்டியில் பறந்து விட்டான்.

"என்ன ஜன்மம் யா இவங்கெல்லாம்", என்று சலித்துக்கொண்டார் கடைக்காரர்.

கேட்டை தாண்டும் போது எதிரில் திலீப் வருவதைப்பார்த்தான். திலீப் அவன் பாலிய சிநேகிதன். ["நடந்ததை அவனிடம் சொல்லிவிட வேண்டும்"]

வண்டியை ஓரம் கட்டி.."டேய் திலீப்.. மொக்கை நாயே.."

"டே மச்சி.. எங்க டா நீ? ஆபீஸ் போல?", திலீப் சிரித்தான்.

"அது கடக்குது விடுடா. ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் தம்பி. நம்பவே மாட்ட நீ"

திலீப் புருவத்தை உயர்த்தி "மறுபடியும் எதையோ புதுசா நம்பிருக்க நீ.. மேல சொல்லு.."

"தீபிகா ஞாபகம் இருக்கா? அதான் மச்சி.. அந்த கும் பிகர்.. நம்ம காலேஜ் தான் டா.. நம்ம ஜூனியர்.."

"ஒ.. அவளா.. நீ தான் கும் பிகர்ன்னு சொல்லிக்கணும். அட்டு பீஸ் அது"

"போடாங்கு.. மொக்கை போடாமக்கேளு..." 

"என்னடா..மறுபடியும் லவ்வா அவ மேல? பீர் அடிச்சுகிட்டே பேசலாமா?"

"அது இன்னிக்கு ராத்திரி. பட்.. கேளு.. நான் கேட்டாண்ட தம் அடிசிகிட்டிருந்தேன் டா...அப்போ அவளே வந்து என்கூட பேசினா மச்சி.. அழ வேற ஆரம்பிச்சுட்டா.."

நடந்ததை சொன்னான் ராஜேஷ்.

"இப்போ சொல்லு மச்சி.. இது லவ் தானே? சூப்பர் லைப் மச்சி நாம வாழறது... நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் டா.."

திலீப் கேட்டுக்கொண்டே இருந்தான்.

"அப்டியே என்னவோ ஒரு சூப்பர் பீலிங்கு மச்சி.. இன்னிக்கு நைட் பீர் அடிச்சே ஆகணும்.. miracles seldom happen மச்சி.."

"போதும் டா..போதும் டா.. இன்னிக்கு நைட்டு வா.. பீரோட பேசுவோம்.."

"சுவர் டா.. கால் பண்றேன் சாயங்காலம். இப்போதைக்கு பை"

"பாத்துப் போ தம்பி.. ஒண்ணு மட்டும் சொல்றேன்.. ஒன்ன யாரு வேணும்நாலும் சுலபமா ஏமாத்த முடியும் போலிருக்கு.. சீக்ரம் எல்லாரையும் நம்பிட்ற.. பாத்துக்கோ..."

"அதெல்லாம் இல்ல டா.. இன்னிக்கு நடந்தது நிஜம்.."

"சந்தோசம்.. anyway, சொல்றத சொல்லிட்டேன்..பஸ் வருது..மிஸ் பண்ண முடியாது.. பை டா.. சாயங்காலம் பாப்போம்...", ஓடி விட்டான் திலீப்..

ராஜேஷ் யோசிக்க ஆரம்பித்தான். திலீப் கடைசியாகச் சொன்னது அவனை சிந்திக்க வைத்தது. காலேஜில் இவனை கண்டுக்கக்கூடாத பெண் எப்படி அவ்வளவு வருடம் கழித்து இவனைக்கண்டு வழிய வேண்டும்?

"அப்டி ஒண்ணும் நான் மன்மதன் இல்லையே.. சம்திங் ராங்.. எல்லாம் ரைட்டா நடந்தால், நிச்சயமா ஏதோ ஒரு எடத்துல தப்பு இருக்கு.."

இன்னொரு சிகரட்டை வாயில் வைத்தான். தீக்குச்சியை பற்ற வைத்தான். நெருப்பு இருந்தது, அனால் சிகரட் பற்றவில்லை. மறுபடியும் முயற்சி செய்தான். விரலில் இருந்த தீக்குச்சி இல்லை. உலகம் இருள ஆரம்பித்தது. முழுதும்  இருட்டு..

கண் விழித்தான்.. வலதுபுறமாக படுத்திருந்த அவன், தன் கண் முன்னால் ஒரு செத்துப்போன கரப்பன்பூசியைப் பார்த்து திடுக்கிட்டு எழுந்தான். அப்பூச்சி செத்துப்போச்சா என்று சோதித்தான்.

"சரி தான்.. கண்டது கனவு தானா? ஒ**, திலீப் அங்கயும் வந்து கெடுத்துடாண்டா.. anyway, இந்த லக்ஷ்மன்-ரேக்கா பூச்சி மருந்து நல்லாத்தான் வேல செய்யுது.."

கரப்பான்பூச்சியை அறையின் ஓரத்திலிருந்த குப்பைத்தொட்டியில் போட்டு, "Fail, அவமானம் டா.. கனவுல கூட பிகர் மாட்ட மாட்டேங்குது. ஹ்ம்ம்.. விடு..அஹம் பிரம்மாஸ்மி.."

சிகரட்டை பற்றவைத்தான். இப்போது சிகரட் பற்றியது. புகை மண்டலம்.      

திங்கள், 6 பிப்ரவரி, 2012

கொன்னாப் பாவம், தின்னாப் போச்சு..

எதுக்கு கொல்லவேண்டும்? எதுக்கு திங்கவேண்டும்? மாமிசம் சாப்பிட்டால் கர்ம மதிப்பெண்கள் எத்தனை? மனிதச்ச்சங்கிலியின் இயல்பான விஷயம் தானே மாமிசம் உண்ணுதல்? அல்லது செடி கொடிகளைத் தின்றால்த்தான் வாழ்வு மேன்மைப்படுமா? இது எல்லோருக்கும் தெரிந்தும் தெரியாமல் இருக்கும் ஒரு அறியாமைநிலை சங்கடம்.

தெரிந்தே நாம் எதற்க்காக ஒரு உயிரைக்கொன்று திங்க வேண்டும்? இது சைவர்களின் வாதம். அப்படிஎன்றால் செடிகளுக்கு உயிர் இல்லையா? ஐந்தறிவு இல்லாத காரணத்தினால் அது உயிர் பலி ஆகாதா? என்ன ஒரு குழப்பம்!

காலங்காலமாக இந்த நிலைமை ஆராயப்பட்டும், சண்டைப்போடப்பட்டும் வளர்ந்திருக்கிறது. கொழுந்து விட்டெரியவில்லை, தற்காலிகமாக மறைந்துக்கொண்டு ஒளிந்திருக்கிறது. கேள்வி கேட்கும் திறனை மனிதன் இழந்துக்கொண்டிருப்பதனால் இம்மாதிரியான எண்ணங்கள் மறைந்துக்கொண்டிருக்கின்றன. ஒரு விதத்தில் இது நல்லதுதான். "எவரைப்பற்றியும் யாரும் எந்நேரத்திலும் கவலைப்படத்தேவையில்லை" என்ற நோக்கத்தில் வாழ்க்கை வளைந்துக்கொண்டிருக்கிறது என்று நம்புகிறேன். இந்த வேகத்தின் பொருட்டு இவ்வாறான யோசனைகள் வந்தாலும், "எதற்கு நேரத்தை வீணடிக்கவேண்டும்" என்ற எண்ணம் வந்துவிடுகிறது. விடுங்கள்.

பிராமணர்கள் மாமிசம் சாபிடுவதில்லை, அது அந்தக் காலம். நான் கூறுவது இந்தக்காலம். சிக்கன் புல் மீல்ஸ் கட்டும் பிராமணர்களில் நானும் ஒருவன். இதில் பெருமைப்பீதிக்கொள்ள எதுவும் இல்லை. நன்றாக இருக்கிறது, தின்கிறேன். இதை வெளிப்படையாக சில பார்பனர்களிடம் பேசினால், அவர்கள் கூறும் சில மொழிகள்:

"நீயெல்லாம் பிராமணனா?" - என் கல்லூரி நண்பன் என்னிடம் கேட்டது.
"இல்லை. உண்மையான பிராமணன் யாரென்று தெரியாது, நீயும் கிடையாது" - என்னுடைய பதில்.

"இதெல்லாம் எல்லார்கிட்டேயும் சொல்லிண்டிருக்கதே" - என் அன்னை கூறியது.
"விடும்மா" - என் பதில்.

"இவனுக்கு சனி பிடிச்சிருக்கு. அதான் இதெல்லாம் தைரியமா செய்யறான்" - ஒண்ணு விட்ட சொந்தக்காரரின் வார்த்தை.
"சனி பகவான் என் நண்பன்" - மனதிற்க்குள் நானே எண்ணிக்கொண்டது.

"இப்போல்லாம் இதெல்லாம் சாதாரணம். சாப்டறதோ சாப்டர. அதுக்கப்றம் குளிச்சுட்டு காயத்ரி மந்திரம் சொல்லிடு, பாவம் ஒட்டிக்காது" - ஒண்ணு விட்ட ரெண்டு விட்ட உறவினர் கூறியவை.
"என்ன கொடுமை சரவணா" - வானதைப்பர்த்து நான் கூறியது.

இப்படி அடுக்கிக்கொண்டே செல்லலாம். எதிர்ப்புகளை நேராக தெரிவித்தவர்கள் மிகவும் சிலர். கவலைக்கிடமில்லை. சந்தோசம். நான் சிறு வயதிலிருந்தே அசைவ சாப்பாட்டை விரும்பி சாப்பிட ஆரம்பித்துவிட்டேன். சுவை நன்றாக இருந்தது, மேலும், ஒரு சிக்கன் துண்டை தின்பதில் ஒரு சுவாரசியம் இருந்தது. இட் வாஸ் ஏ சாலஞ். முதல் முறை சாப்பிட்டப்போதே வீட்டில் கூறிவிட்டேன். என்ப்பெற்றோர் விரிந்த மனப்பக்குவம் உடையவர்கள். "ஏன் சாப்டர?" என்று கேட்டார்கள். "பிடித்திருக்கிறது" என்றேன். "என்ஜாய், பட், பாட்டி தாத்தாட்ட சொல்லாதே" என்றார்கள். அதன் படியே நடந்தேன். இது என் கதை. இப்படியே ஓடிக்கொண்டிருக்கிறது, இன்று வரை.

சாந்தமாக செல்கிறது வாழ்க்கை என்று நினைக்கும் போது, சில மனிதர்கள் குழப்பி விடுகிறார்கள். என் மாமா கூறியவை:

"நானும் உன்ன மாதிரி எல்லாம் சாப்டுண்டுதான் இருந்தேன் டா. இப்போ எல்லாம் சாப்ட்டுக்கோ. ஆனா ஒண்ணு மட்டும் மறக்காதே. நான் நெரிய பட்ருக்கேன் வாழ்க்கைல. மத்தவன் அனுபவத்துல படிக்கறவன் புத்திசாலி; தன்னோட அனுபவத்துல படிக்கறவன் கொஞ்சம் முட்டாள்; பட்டும் படிக்காதவன் அதி முட்டாள்" என்று கூறிச்சென்றார். கியூரியாசிடியின் காரணமாக நான் கொஞ்சம் முட்டாள் ஆகிறேன். பரவாயில்லை.

முக்கால்வாசி உண்மை / பொய் ஞானிகள், வாழ்க்கையில் எல்லா விஷயங்களை செய்து முடித்தப்பிறகு ஞானம் பெறுகிறார்கள் அல்லவா? அது ஞாயமா? அப்படி சில விஷயங்களை உணர்கிறவர்கள் ஞானிகளா? "அர்த்தமுள்ள இந்துமதம்" என்றப் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் என்ன கூறுகிறார் என்றால்:

"நாளையைப்பற்றி நினைக்காதே, நேற்று நடந்ததை மறந்துவிடு. வருபவை எதுவாயினும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்." - இப்படி வாழ்பவர் வெறும் மனிதரா இல்லை ஞானியா? சற்று உள்நோக்கிப்பார்த்தால், ஞானி கூட இதைதான் செய்ய முற்படுகிறார் இல்லையா? அப்போது யார் ஞானி, யார் மனிதன்? இந்தக்கேள்விக்கு விடைக்கிடைத்துவிட்டால், "கொன்னாப்பாவம் தின்னாப்போச்சு" என்பதற்கு விடைக்கிடைத்துவிடும் என்று நினைக்கிறேன்.

இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட விதிகள் இருந்தது என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். கூறியவர்கள் எல்லோரும் பித்துபிடித்தவர்கள் ஆக முடியாது. ஏதோ ஒரு மிஸ்ஸிங் லிங்க் இருக்கிறது என்று தோன்றுகிறது. அதை நாம் தொலைத்திருக்கக்கூடும். தெரியவில்லை.

"இறைவன் இருக்கானா இல்லையா?" என்ற கேள்வியை விட, "யார் ஞானி, யார் மனிதன்?" என்ற கேள்விக்கு ஆயிரத்திற்கும் மேல் பதில்கள் உள்ளன. அந்த ஆயிரத்தில் ஒரு பதில் கூடவா சரியான பதில் இல்லை?

அவரவருக்கு ஏற்றவாறு ஏதோ ஒரு பதிலை எடுத்துக்கொண்டு அதான் உண்மை என்று அலைந்துக்கொண்டிருக்கும் மனிதர்கள் பலர். சில நபர்கள் அதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. சிலர், அதை நினைத்துக்கொண்டு குழம்பி நேரத்தை வீணடிக்கிறார்கள். அவர்களில் நானும் ஒருவன்.

இந்தக்கேள்விக்கு பைனரி பதில் கிடையாது என்றால் மக்கள், ஞானிகள், கடவுள் (அப்படி இருந்தால்) எல்லோரும் குழம்பியவர்கள் ஆகிவிடுவார்கள் அல்லவா?

தெளிவானவன் தெளிவான விடையை என்றும் அளிப்பான். இல்லாவிடில் அவனிடம் காண்பது தெளிவல்ல, ஞானம் அல்ல. வெறும் அறியாமை.

இதுவரை நான் செய்வது:

"நான் கொல்லமாட்டேன். திம்பேன், சிலபொழுது சுவைக்காக, சிலபொழுது வயிறை நிரப்ப!"

இதை இப்படி மாற்றினால் தத்துவம் ஆகிவிடுமோ?

"நான் கொல்லமாட்டேன். திம்பேன்!
வயிறை நிரப்ப!"

அப்படியென்றால், வெகு விரைவில் நான் ஒரு ஞானி.

வெள்ளி, 20 ஜனவரி, 2012

சிட்டுவேஷன் சாங்க்ஸ்

முத்து அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி நகரில் உள்ள மக்டொனால்டில் தனியாக அமர்ந்திருந்தான். அவனை சுற்றிலும் வெள்ளைக்கார ஜனங்கள் தான் பெரும்பாலும் இருந்தனர். அவர்களை நேராகப் பார்ப்பதில் பயம் கொண்ட இவன், ஒரு புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்தான். புதுசாக வாங்கிய தொலைப்பேசியில் பாடல் கேட்டுக்கொண்டிருந்தான்.

"ஆசையே அலைபோலே..நாமெல்லாம் அதன் மேலே.. ஓடம் போலே ஆடிடுவோமே  வாழ்நாளிலே.."

ஓரக்கண்ணாலேயே மட்டும் உள்ளே வந்து போகும் பெண்களை பார்த்துக்கொண்டிருந்தான். இவன் பார்க்கிறான் என்று தெரிந்து அவர்கள் இவனைப்பார்த்தல் வெகு திறமையாக புத்தகத்தை படிப்பதுப்போல் பாவலா காட்ட ஆரம்பித்துவிடுவான். உண்மை என்னவென்றால், அவர்கள் இவனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. தங்கள் காரியங்களைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்கள். முத்துவிற்கு அப்படி என்னவோ ஒரு தோணல், எல்லோரும் இவனையே கவனிப்பதுப்போல். பத்தமடை ஹை ஸ்கூலில் படித்து அவன் கிராமத்திலிருந்தே முதன் முதலாக அமெரிக்கா வந்தவன் இவன் மட்டும் தான். கல்லூரி படிப்பிற்குப் பிறகு ஐ.டி. கம்பெனியில் வேலை கிடைத்து இவனை இங்கு அனுப்பிவிட்டார்கள். அந்த மாலை நேரத்தில், கதவு திறந்தது, ENTER அழகிய பெண்.

சினிமாவில் வருவது போல முத்துவின் கண்கள் அவள் மீது விழுந்தன. சுற்றுப்புறத்தை உடனே மறந்தான். புத்தகத்தை கீழேப் போட்டான். அவன் கண்கள் அவளை விட்டு அசைவதர்க்கில்லை.

"வளையோசை கலகலகலவென கவிதைகள் படிக்குது, குளுகுளு தென்றல் காற்றும் வீசுது.."


"என்ன ஒரு சிட்டுவேஷன் சாங்", முத்து நினைத்தான்.

அழகு என்றால் அப்படி ஒரு அழகு. வருணிக்கவே முடியாது போலிருக்கிறது. இதில் சுவாரஸியமான விஷயம் என்னவென்றால் அவள் தோற்றத்தில் ஒரு தமிழ் பெண் போலவே இருந்தாள். அவள் இவனைப்பார்க்கவில்லை. நேராக பர்கர் வாங்க கியூவில் நின்றாள்.

"நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்"


பர்கர் வாங்கிவிட்டு திரும்பினாள். உட்கார இடம் ஏதும் இல்லை. அவள் முத்துவின்முன் உள்ள காலியான இடத்தைப்பார்த்த பிறகு முத்துவின் பாவலா தொடரலானது. நேராக அவள் முத்துவின்பால் நடந்து வந்தாள். அப்போது..

"எக்ஸ்கியூஸ் மீ.. இஸ் தி சீட் டேக்கன்?"

முத்து ஹெட் செட்டை கழட்டிவிட்டு, வழிந்தான்.

"நோ நோ நோ..ப்ளீஸ் சிட்..", அசட்டு சிரிப்பு சிரித்தான்.

"தேங்க்ஸ்", பர்கரை மேஜைமேல் வைத்துவிட்டு அமர்ந்தாள். முத்துவால் நம்ப முடியவில்லை. பல்ஸ் மீட்டரைப் வைத்தால் அவன் இருதயம் பிரட் லீ போடும் பந்தை விட வேகமாக அடித்து கொண்டிருப்பதை நாம் அறிந்திருப்போம்.

"ஹாய்.. ஐ அம் சான்ட்ரா.. ", தன் கையை நீட்டினாள்.

"ஹல்லோ.. ஐ அம் முத்துக்குமரன். இன் ஷார்ட்டு, முத்து...", கைக்கொடுத்தான். பேச்சு வரவில்லை.

"ஆர் யூ பிரம் இந்தியா?"

"எஸ். ஐ அம் பிரம் சென்னை. யூ நோ பில்ட்டர் காபி? தட் பிளேஸ்", வேண்டாத உதார்விட்டான். பத்தமடை என்று சொன்னால் துரத்தி அடித்து விடுவாளோ என்று ஒரு பயம்.

"ஓ..தமிலா?", என்றாள். முத்து தொலைப்பேசியை கீழேப்போட்டுவிட்டான். அவள் சிரித்தாள். ஸ்ரேயாவும் கிம் கார்தேஷியானும் சேர்ந்து செய்த கலவைப்பெண்  போல ஒரு புன்னகை.

"நம்பவே முடியல. நீங்களும் சென்னையா?"

"நோ நோ.. கோயம்பத்தூர்.. பட், நான் இங்கேதான் வளந்தேன்.."

"வெறி நைஸ்.. நான் ஆக்சுவலி பிரம் பத்தமடை.. நியர் திருநெல்வேலி.. சுமால் வில்லேஜ்"

"ஓ அப்படியா.. நைஸ்.. இங்க என்ன பண்றீங்க?"

"டேக் சாப்ட் கம்பனில இஞ்சினியர்..நீங்க?"

"நான்.. மார்கெடிங்.. எக்சிகியூடிவ் சர்வீஸ்.."

"சூப்பர்..", முத்துவிற்கு கொஞ்சம் தைரியம் வந்தது. அவன் நண்பர்கள் அவனிடம் சொன்னது, "அமெரிக்கர்கள் எல்லாரும் ஓப்பன் டைப்". கடலை போட ஆரம்பித்தான்.

"எப்டிங்க இவ்வளோ அழகா இருக்கீங்க?", என்று குபுக்கென்று கேட்டான். கேடி. பத்தமடையில் எவ்வளவு கலைச்செல்வியுடனும் கோப்பெரும்தேவியுடனும் கடலை போட்டிருப்பான்.

சான்ட்ரா சிரித்தாள். "தேங்க்ஸ்" என்று சிறு புன்னகைப்புரிந்தாள்.

"உங்க நிஜப்பேரும் சான்ட்ரா தானா?'

"சந்திரலட்சுமி. சான்ட்ரா, சுருக்கமா.."

"நைஸ்..என்னங்க, நான் உங்க கிட்ட ஒண்ணு சொல்லலாமா?"

"கோ அஹெட்..", பர்கரை எடுத்தாள்.

"நான் ரொம்ப ஓபன் டைப்புங்க. மனசுலப்பட்டதை அப்படியே சொல்லிடுவேன். இப்போ என் மனசுல ஒரு விஷயம் இருக்கு. சொல்லத்தயக்கமாகவும் இருக்கு", கீழே பார்த்துக்கொண்டு பேசினான்.

சான்ட்ராவிற்கு என்ன வரப்போகிறதென்று தெரிந்து விட்டது. பர்கரை கீழே வைத்தாள்.

"ஐ லவ் யூ. பாத்தவொடனே லவ் வந்த்ருச்சு.", என்றான். பல்ஸ் ரேட்டு ஏற ஆரம்பித்தது.

சான்ட்ரா நிதானமாக, "வை டூ யூ சேய் தட்? ரீசென் குடு"

"நீங்க அவ்வளோ அழகு..இவ்வளோ அழக நா பாத்ததில்ல.. அண்ட் ஐ அம் இன் லவ் வித் யூ.."

"முன்தினம் பார்த்தேனே..பார்த்ததும் தோற்றேன்..", ஹெட் செட்டிலிருந்து பாடல் ஒலித்தது.

"என்ன டைமிங்" என்று முத்து நினைத்துக்கொண்டான். பூவைக்கொடுத்து விட்டோம், இனி அதை வாங்கிக்கொள்வது அவள் இஷ்டம் என்று நினைத்துக்கொண்டான்.

"சாரி. சீட் இல்லையேன்னுதான் இங்க ஒக்காந்தேன். லீவ் தாட். இந்த லவ் எல்லாம் எனக்கு, ஐ கான்ட்..", தலை மேல் கை வைத்தாள்.

"வை? நான் பாக்க கருப்பா இருக்கரதுனாலையா? நான் நல்லா சம்பாதிக்கிறேன். என்ன பிராப்ளம்?"

"ஹ்ம்ம்.. அப்போ ஒரு நைட்டுக்கு 200 டாலர்ஸ். செரியா? யுவர் ஹவுஸ்."

ஒரு நொடிக்கு முத்துவின் இருதயம் நின்றது. அதிர்ச்சி தாங்க முடியவில்லை. புத்தகத்தில் உள்ள ஓஷோவின் முகத்தை பார்த்து கொண்டு தன்னையே சாந்தபடுத்திகொண்டான்.

"ஒரு நல்ல பொண்ணா இருந்தா நான் லவ் யூ சொன்னதுக்கு செருப்பாலேயே அடிச்சுருப்பா. நல்ல வேளை. இவளும் ஒரு ராத்ரிக்கு செரிதான்னு நெனக்கறேன். வேற என்ன இருக்கு என் வாழ்க்கைல. சரி சொல்லிடுவோம்" என்று நினைத்துக்கொண்டான்.

"வாட் ஆர் யூ திங்கிங்?", என்று புன்னகைத்தாள்.

"சேரி. 200 ஜாஸ்தி. 150 தரேன். செரியா?"

"அப்போ அஞ்சு மணி நேரம் தான்"

"ப்ளீஸ். நானும் தமிழ், நீயும் தமிழ். ஒரு தடவை.."

சான்ட்ரா புன்னகைத்து, "பாவமா இருக்கயே நீ. சரி. இப்போவே போலாமா?" என்றாள்.

"அப் கோர்ஸ். யூ பினிஷ் யுவர் பூட்"

"ஷுவர்", என்று சாப்பிட ஆரம்பித்தாள்.

"பட் வன் திங் நான் சொல்லணும். ஐ அம் எ டிரான்ஸ். உனக்கு ஒகே வா?"

"அப்டின்னா", என்றான்.

"நான் பொண்ணு கடயாது. ரெண்டுங்கெட்டான். இங்க இது ரொம்ப பாப்புலர்"

முத்து சான்ட்ராவைப்பார்த்தான், கண்களை மூடினான்.

"என்ன கொடுமை குமரா", என்று தலை மேல் கையை வைத்தான். ஹெட் செட்டை மாட்டிக்கொண்டான். எழுந்து,

"ஐ அம் சாரி. ஐ கான்ட்",

என்று சொல்லி நடக்க ஆரம்பித்தான். அவன் தொலைப்பேசியில் பாடல் ஆரம்பித்தது..

"சோதனை மேல் சோதனை...போதுமடா சாமி.."

என்ன ஒரு சிட்டுவேஷன் சாங்கு என்று நினைத்துக்கொண்டு திரும்பிப்பார்க்காமல் விரைவாக நடந்தான்.

"வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி.."





திங்கள், 16 ஜனவரி, 2012

அரக்கர்கள் இரண்டு பேர்..

இடம் 1

சேட்டு: சாப், வுட்ருங்கோ என்ன.. தப்பு பண்ணிட்டேன்.. மாப் கீஜியே..

(சேட்டின் மண்டையிலிருந்து இரத்தம் வழிந்துக்கொண்டிருந்தது. அவனை சுற்றி நான்கைந்து ரௌடிகள் இருந்தார்கள். சேட்டு தரையில் முட்டி போட்டுக்கொண்டு கிடந்தார், சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த மனிதரை நோக்கி கதறிக் கொண்டிருந்தார். அய்யாவை திரையில் இப்போது பார்க்க முடியாது, அவர் முதுகு தெரியும்படியே காமிராவை வைக்கவேண்டும்)

ரௌடி: ராம்லால், இப்போ மன்னிப்பு கேட்டு இன்னா பிரயோஜனம்? அய்யாக்கிட்ட உன் புத்திய காமிச்சுட்ட பாத்தியா? ஒக்காளி உங்கள எல்லாம் ராஜஸ்த்தான் திருப்பி அனுப்பணமுடா..

(அய்யா துப்பாக்கியை ராம்லாலின் நெற்றியில் குறி பார்த்தார். ராம்லால் மேலும் கதற ஆரம்பித்தான்)

சேட்டு: எனக்கு ரண்டு பொண்ணு சாப்..வுட்ருங்கோ..

இடம் 2

மேனன் ஒரு தூணில் கட்டப்பட்டிருந்தான். உடம்பு முழுவதும் வேர்த்து ஊதிக்கொண்டிருன்தது, அவன் முகத்தில் பயம் நன்று விளங்கியது. எங்கிருந்தோ பூட்ஸ் சத்தம் கேட்டது. கண்ணிலிருந்து மேனனுக்கு நீர் வழிய ஆரம்பித்தது, ENTER கமுதி

(கமுதியின் முதுகை நோக்கித்தான் காமிரா இருக்கிறது)

கமுதி: மலையாளத்தான்.. (நக்கலாக சிரித்தான்) இன்னுமா தமிழ் பேச வராது ஒனக்கு?

மேனன்: I am a public servant..I will report to the authorities..

கமுதி: எண்டே அம்மே..எண்த்தான இத்தரை இங்கலீஷு ?

(கட்டையை எடுத்து மேனனின் காலில் ஓங்கி அடிதான்..மேனன் கதறினான்)

இடம் 1

சேட்டு: சாப், வேணாம் சாப்.. வேணாம்.. கலக்ட்டர்ட சொன்னதில்லாம் மேனன் தான்.. என்ன வுட்ருங்கோ சாப்..

ரௌடி: ஏய்.. யார்ட்ட பேசற.. இதக்கேளு..

(ரௌடி தன் தொலைபேசியை தட்டினான்.. சேட்டின் குரல் கேட்டது..)

சேட்டு: (தொலைபேசியில்) கலக்ட்டார் சாப்.. நான் நிம்பல்க்கோ அப்ரூவர் ஆரேன்.. இந்த மேனனும் அய்யசாப்பும் சேர்ந்துகிட்டு தான் டெண்டர்ல்ல ஜகடா சென்ஜ்ருக்காங்க... இருபத்தஞ்சு கோடி சாப்.. நான் வெறுமனே முத்துகிட்டே காசனுபிச்சேன்.. சாப், இந்த முத்து தான் அய்யசாபோட ரைட்டு ஹாண்டு.. வுட்ராதீங்க அவனையும்..

(ரௌடி தொலைபேசியை நிறுத்தினான்..சேட்டுக்கு வியர்க்க ஆரம்பித்துவிட்டது..)

ரௌடி:  அய்யே.. ஒண்ணுக்கு புட்டான் தல இவன்.. ராஜஸ்தான்ல தண்ணியே இல்லன்னு சொல்றீங்க.. எங்க தண்ணிய குடிச்சுட்டு எங்க முன்னாடியே மூத்தரம் வேற போற நீ..

(பட் என்று புரமண்டையில் ஒரு தட்டு தட்டினான்..சேட்டு விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தான்)

(அய்யா ரௌடிகளைப்பார்த்து வெளியே போகுமாறு சமிக்ஞை செய்தார். எல்லோரும் வெளியேறினார்கள்)

அய்யா: இப்போ உன் கடைசி ஆசை என்ன?

 இடம் 2

மேனன்: அய்யா ஒன்ன சும்மா விடபோரதில்லை.. பட்டி..

கமுதி: ஒக்காளி.. அவன் பேர சொல்லாதே.. காசுன்னா நக்கிட்டுப்போற நாய் அது.. ஒன்னமாதிரி.. டெண்டர் எனக்கு வரத்தானே ஒனக்கு இருபத்தஞ்சு லட்சம் குடுத்தேன்.. இதுக்கு மேல நீ காச வெச்சு என்ன செய்யப்போற? ஹான்?

(மேனன் முழித்தான்.. ஏதோ ஒரு பேரபாயம் வரப்போவது அவனுக்கு நன்கு விளங்கியது..)

கமுதி: வருத்தமா இருக்கு டா.. மலையாளத்தான்.. உங்கள நம்பக்கூடதுன்னு சும்மாவா சொன்னாங்க? த்த.. புத்திய காமிச்சுட்ட பாத்தியா?!

(மேனன் மேலும் பயந்தான்.. கமுதி கட்டையை தூக்கி போட்டான்.. முதுகிலிருந்து ஒரு அருவாளை எடுத்தான்.. மேனனின் கண்கள் பிதுங்க ஆரம்பித்தது..)


இடம் 1

அய்யா: அது எப்டி உங்க வீட்டு ரொட்டிகளும் குட்டிகளும் எப்பவுமே வித்யாசமாவும் ருசியாவும் இருக்கு? பதில் சொல்லு சேட்ஜி..

(சேட்டை உயர்த்தி ஒரு நாற்காலியில் உட்க்கார வைத்தான் அய்யா)

சேட்டு: என் பொண்ணுகள ஒன்னும் செஞ்சுரதீங்கோ சாப்.. என்ன வேணா கதம் பண்ணிடுங்கோ..

(உரக்கக சிரித்தார் அய்யா)

அய்யா: பயபடாதே சேட்டு.. பொண்ணுகள விடு..இந்த சப்பாத்தி பத்தி மட்டும் சொல்லு.. என்ன போடறீங்க?

சேட்டு: எதுவும் இல்ல சாப்.. கோதுமே தான்..

அய்யா: எங்க ஊருல மட்டும் என்ன போடறாங்களாம்.. மாட்டு சாணியவா? வேற என்ன..

சேட்டு: நெய் சாப்.. நெரிய போடுவோம்..

அய்யா: அதானே பாத்தேன்.. இந்த ஊருல எந்த மயிதையும் போடறதில்லை..

(சேட்டு சிரித்தான்..அய்யா உரக்க சிரித்தான்..சேட்டு மேலும் உரக்க சிரித்தான்..அய்யா துப்பாக்கியை சேட்டின் வயிற்ருக்கு கீழே இறக்கினார்..)



(அடுத்து வரும் காட்சிகள் இரண்டும் ஒரே நேரத்தில், ஒரே ஸ்க்ரீனில் வரும். ஒன்றுக்குப்பின் ஒன்றாக வெளியிடப்படும்..Split Screen shots)


  இடம் 2

மேனன்: கமுதி.. அடிச்சு களையும் ஞான்.. அவுத்து விடு.. இப்டி dont  be  a coward ..

கமுதி: (சாந்தாமான குரலில்) உன் கடசீ ஆசை என்ன? இப்போவே சொல்லு..

மேனன்: வேணாம்..வுட்டுடு..

(கமுதி அருவாளால் தலையை வெட்டினான்.. தலை கீழே விழுந்தது...Screen Freeze)

இடம் 1

அய்யா: ஒண்ணு மட்டும் சொல்றேன் சேட்டு..

(சேட்டின் முகம் மாறியது, துப்பாக்கியை பார்த்த பிறகு..)

ராஜஸ்த்தான்லேந்து நீ இங்க வந்து குடுத்தனம் போட்டா தமிழ்காரன் ஆய்ட முடியுமா?

(சேட்டு இல்லை என்று மண்டையை ஆட்டினான்)

புரிஞ்சா சரி.. நான் கமுதி கடயாது..

(துப்பாக்கி சுட்டது..சேட்டு அலறினான்.. அவனுக்கு இனி எந்த பிள்ளையை பெறவும் வாய்ப்பே இல்லை..Screen Freeze)

இரண்டு இடத்திலும் காமிரா மெதுவாக சுற்றி வருகிறது.. லேசாக லேசாக அய்யாவின், கமுதியின் முகங்கள் விளங்குகின்றன..பிரீஸ் அகன்று இரண்டு முகங்களும் சிரிக்கின்றன.. திரைப்படம் துவங்குகிறது..

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

ரவுத்திரம்

காட்சி 1

இடம்: உள்துறை அமைச்சர் அரங்கசாமி இல்லத்தில் உள்ள வாசல் சுவரு  
நேரம்: காலை ஒன்பது மணி நேரம்  
கதாபாத்திரங்கள்மூன்று பிச்சைகாரர்கள் (படபிடிப்பில் வருபவர்கள்  

படப்பிடிப்பில் வராத கதாபாத்திரங்கள்கட்சி தொண்டன்போலீஸ் கமிஷனர்வட்டச்செயலாளர்
அமைச்சர் அரங்கசாமிமற்ற கட்சி தொண்டர்கள் மற்றும் வேலைக்காரர்கள்   

படப்பிடிப்பில் வராத காட்சி  

ஒரு டாட்டா சுமோ வேகமாக அமைச்சரின் வீட்டு வாசலின் முன்னால் வந்து நின்றதுபட படவென காரின் கதவுகள் திறந்து மூடின.வண்டியிலிருந்து இறங்கினான் வட்டச்செயலாளர் 
.ரா.ராபக்கத்தில் இறங்கினான் பாளையங்கோட்டை சேகர்.   

.ரா.ரா. : ஏலஅய்யா கிட்ட எதுவும் ஒழுங்கா சொல்லண்ணும்இல்லாட்டி தாறு மாறு ஆக்கிபுடுவாறுஎன்ன நான் சொல்லறது ?! மறுபடியும் சொல்றேன்விஷயத்த சரியா சொல்லலேன்னா காண்டு ஆயிடுவாருஎன்ன நான் சொல்றது?!  

சேகர்நீங்க பேசறது பாளையங்கோட்டை சேகர் கிட்ட தல.... நான் ஊருக்குள்ள கால எடுத்து வெச்சா அவன் அவன் நாச்சரதுக்கு போய் ஒளிஞ்சுக்குவான்... அய்யாவ கேவலமா பேசினவன வல்ல நாட்டு மலை பக்கம் போட்டுடறேன்...   

.ரா.ரா. : அடக்கி வாசி ஏல கூறுகெட்ட மூதேவி.... (மற்றொரு கட்சி தொண்டன் வருகிறான்...அவனை பார்த்துஅப்பு....எப்படி இருக்கஎன்ன சங்கத்து பக்கமே ஆள காணோம்பிரியாணி போடலேன்னா வரமாட்டியோ?   

தொண்டன்தலைவா... அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை... என் பொண்டாடிக்கி போன வாரம் தான் பிரசவம் ஆச்சு...அதான் வர முடியலை...எழவுபோட்ட புள்ள பொறந்துடுச்சு...  

.ரா.ரா. : சாமி... பொட்ட புள்ளைங்கதான் இந்த காலத்துல வாழ முடியும்...ஆம்புளைங்களுக்கு இந்த காலத்துல மதிப்பே இல்லை...எல்லாம் இந்த பொட்டை கழுதைங்களுக்குதான்....சரி சரி....அய்யா இருக்காரா? 
தொண்டன்இப்போ தான் முதலமைச்சர பாத்துட்டு வந்தாரு... தலைவா உள்ள போங்க நீங்க....   

.ரா.ரா.: நல்லதா போச்சு... போய் சோலிய முடிச்சுட்டு வரேன்...  

தொண்டன்சரி தலைவா....  

வாசலில் மூன்று போலீஸ் ஜீப்புகள் வந்து நின்றனகமிஷனர் மூர்த்தி இறங்கினார்.   

அரங்கசாமி: வா வா கமிஷ்னறு... சோலி எல்லாம் எப்படி?   

மூர்த்திஏதோ தேவர் அய்யா புண்ணியத்துல போய்ட்ருக்கு... (நக்கலாக சிரித்தான் மூர்த்தி)  

அரங்கசாமி: இந்த கோயம்பத்தூர் குசும்பு இன்னும் ஒன்ன விட்டு போகலேன்னு நெனக்கறேன்... (சிரிக்கிறார்கள்)   

மூர்த்திஎன்ன விஷயம்பட்டறைல எதாவது சமாச்சாரமா?   

.ரா.ரா.: ஏல மூர்த்தி... சாமி அய்யாவ அந்த பாழா போனவன் போன அசம்பளி மீட்டிங்குல அசிங்கபடுதிட்டான்... தெரியும்னு நெனக்கறேன்...அவன போட்டு தள்ளனும்..சேகர் வந்திருக்கான்...பொட்டு வெக்கணும் சீக்கிரம்...   

மூர்த்திஅவ்வளோ தானேபெருசா ராமசாமி நாயக்கற போடற மாதிரி சொல்லுறீங்கமுடிச்சிடலாம் கவலைய விடுங்க...  

அரங்கசாமி(சிரித்துக்கொண்டே..இத பத்தி அப்புறம் பேசுவோம்... அம்மணி... நம்ம ஆளுங்களுக்கு காபி கொண்டு வா... அப்படியே ரமணா கிட்ட வண்டிய ரெடி பண்ண சொல்லு.... அஞ்சு நிமிஷத்துல கெளம்பனும்... 

படப்பிடிப்பில் வரும் காட்சி   

பிச்சைக்காரன்: கவலை வேண்டாம்... கவலை வேண்டாம்... வாழ்க்கையில் ஒன்றும் நிலையானது அல்ல... மது... மாது... எதுவும் நிலையற்றது... உயிர் மயிர் போன்றது... பணம்...பதவி.....ஹ ஹ...பதவி...கரி!   

காட்சி ஒன்று நிறைவு பெறுகிறது....    
                     
காட்சி 2 

இடம்உள்துறை அமைச்சர் அரங்கசாமி இல்லம்  
நேரம்காலை ஒன்பது மணி 
கதாபாத்திரங்கள்மூன்று பிச்சைகாரர்கள் (படபிடிப்பில் வருபவர்கள்  
படப்பிடிப்பில் வராத கதாபாத்திரங்கள்கட்சி தொண்டன்போலீஸ் இன்ஸ்பெக்டர்மந்திரி மற்றும் பலர்  

படப்பிடிப்பில் வராத காட்சி  

அரங்கசாமியின் இரங்கல் கூட்டம் அவரின் மனையில் நடந்துக்கொண்டிருக்கிறதுஅரங்கசாமி கோரமான முறையில் கொலை செய்ய பட்டார்.கொலை செய்த மர்ம நபர்/கள் யாரு என்று தெரியவில்லைமக்கள் கூட்டம் அதிகரிதுகொண்டிருக்கிறது அவரது வீட்டில்எங்கிருந்தும் அழுகை சத்தம் தான் கேட்டு கொண்டிருந்தது.   

அழுகை குரல் 1: அய்யயோ அய்யயோ.... இப்படி அநியாயம் பண்ணிட்டாங்களே... பாழா போச்சே தேவரய்ய்யா...   

அழுகை குரல் 2: இந்த காரியத்த பண்ணினவன் நாசமா போவான்...   

போலீஸ் இன்ஸ்பெக்டர்த்ரீ நாட் ஒன்... கேட் கிட்ட எல்லாரையும் கிளியர் பண்ணுங்க... கூட்டத்த சமாளீங்கய்யா... எழவு...  

கான்ச்டபுள்சரி சார்..   

தொண்டன்நேத்து தான் யா முதலமைச்சரோட நதி நீர் பிரச்சனைக்கு செரியான தீர்வு பத்தி பேசிட்டு இருந்தாரு.... இப்படி போட்டு தள்ளிடாங்களே.... முக அடையாளம் தெரியாத மாதிரி போட்டுடான்யா... ... 

மந்திரி: (பத்திரிகை காரர்களிடம் பேசிகொண்டிருக்கிறார்அரங்கசாமி தேவர் என்னுடைய நீண்ட கால நண்பர்... அவர் தமிழ் நாட்டிற்க்கு ஆற்றிய பணிகளை நாம் எல்லாரும் அறிவோம்... அவருக்கு இது போன்று ஒரு கோரமான முடிவு வந்திருக்க கூடாது தான்... இது எனக்கு ஆண்டவன் இருக்கானா இல்லையா என்ற சந்தேகத்தை வரவைக்கிறது... இதற்க்கு காரணமானவர்களை வெகு விரைவில் கண்டுபிடித்து தண்டனை வாங்கிக்கொடுப்பேன்... இது இந்த தமிழ் மண்ணின் மீதும் என் உயிர் தமிழ் மக்கள் மீதும் ஆணை 

காட்சி இரண்டு நிறைவு பெறுகிறது....    
                     
காட்சி 3

இடம்: ஏதோ ஒரு இருட்டு அறை  
நேரம்காலை   
கதாபாத்திரங்கள்:  சுப்பிரமணியம்சீ.பீ.ஐ ஆபிசர்கள் மூவர்  
அப்போது.... 

சுப்பிரமணியம் ஒரு மிகச்சிறந்த சீ.பீ.அய் forensic அதிகாரியாக விளங்கினான்,  இது ஒரு மூன்று ஆண்டுகள் முன்புஅதற்க்கு பிறகு அவனை ஊழல் வழக்கில் தப்பாக பதிவு செய்து அவனுடைய பதவியையும் பட்டத்தையும் ரத்து செய்துவிட்டது இந்திய அரசுஅதனால் அவனுடைய வாழ்க்கை ஒரு முற்று புள்ளி ஆகிவிட்டதுஇப்போதுஅரங்கசாமி கொலை வழக்கில் சுப்புவின் திறமை வேண்டும் என்று அரசு நினைக்க,மூன்று சீ.பீ.அய் அதிகாரிகள் சுப்புவை நாடி வந்தனர்.   

இப்போது......  

சுப்பிரமணியம் ஒரு இருட்டு அறையில் உட்கார்ந்து கொண்டிருந்தான்அந்த அறையின் ஓரத்தில் ஒரு சிறிய விளக்கு எரிந்துக்கொண்டிருந்தது.சுப்பு ஒரு பீடியை பத்த வைத்தான்அப்போது டக் டக் என்று காலணிகளின் சத்தம் கேட்டதுகதவை திறந்து கொண்டு மூன்று அதிகாரிகள் அறைக்குள் புகுந்தனர்.   

அதிகாரிகுட் மார்னிங் சுப்பிரமணியம்எப்படி இருக்கீங்கபீடிய தூக்கி போடுங்க ப்ளீஸ்... எனக்கு புகை ஒத்துக்காது...   

சுப்பு: குட் மார்னிங் சீ பீ ஐ வாள்... இப்போ என்ன விஷயம்... கொல வழக்கா?   

அதிகாரிரொம்ப ஆச்சர்ய படுவீங்கன்னு நெனச்சேன்... தப்பா போச்சு... சரி விடுங்க... விசயத்துக்கு வருவோம்.... உங்களோட வரலாறு பத்தி எங்களுக்கு நல்லா தெரியும்...  

சுப்பு.. யாருக்குத்தான் தெரியாது?   

அதிகாரிப்ளீஸ்.... கவனமா கேளுங்க...   

சுப்புசொல்லுங்கோ ஒய்... ஆனா எனக்கு பீடி அடிக்கணும்...   

அதிகாரிசரி.... நேரம் அவ்வளவு எனக்கு இல்லை... உங்களுக்கு உங்க பதவிபட்டம் திரும்ப கிடைக்க இப்போ ஒரு வாய்ப்பு வந்திருக்கு... உங்க உதவி எங்களுக்கு தேவை....   

சுப்புசெவத்து கீரைய வழிச்சு கட்டடி சொரணகெட்ட பொண்டாட்டின்னு சொன்னானாம்...  

அதிகாரிஉங்க நெலமை எங்களுக்கு புரியுது... நான் எல்லாத்தையும் கிளியர் பண்ணிடறேன்.. நம்புங்க...   

சுப்புபலே பாண்டியா...   

அதிகாரி: உள்துறை அமைச்சர் அரங்கசாமி தேவர் முக அடையாளம் தெரியாமல் கோரமான முறையில் கொலை செய்யப்பட்டார்..... 

(சுப்புவின் தன் கண்களால் கூர்மையாக அதிகாரியைப்பார்தான்)  
Advanced image forensic process தேவை படுது... உங்களாலத்தான் இதை முடிக்க முடியும்... அரசாங்கத்தோட சிபெசல் ஆர்டர்... எல்லா வழக்குகளையும் உங்கமேலேர்ந்து நீக்குவோம்.... என்ன சொல்றீங்க?   

சுப்பு: (பீடியை சுண்டியபடியேசவரம் செஞ்சு வருஷகணக்காச்சு... பிளேடு வாங்க பைசா இல்லை...   
(அதிகாரிகள் சிரிக்கின்றனர்...)    

காட்சி மூன்று நிறைவு பெறுகிறது...    
           
காட்சி 4

இடம்சீ.பீ.ஐ அலுவலகம்  
நேரம்காலை  
கதாபாத்திரங்கள்பத்திரிகைக்காரர்கள்மூர்த்தி மற்றும் சுப்பிரமணியம்  

சீ.பீ.அலுவலகத்திற்கு முன்னால் பதிரிகைக்காரர்களின் கூட்டம் ஆட்டு மந்தையைப்போல் காட்சியளித்ததுசுப்புவும் போலீஸ் கமிஷனர் மூர்த்தியும் வெளியே வந்துக்கொண்டிருந்தனர்

அப்போது....  

பத்திரிகைக்காரர்: சார் சார்... ஒரு கேள்வி... ப்ளீஸ்...   

போலீஸ்ஒன் பை ஒன்... அமைதி..  

பத்திரிகைக்காரர்மிஸ்டர் சுப்பிரமணியம்உங்களால எப்படி குற்றவாளி பாளைங்கோட்டை சேகர்ன்னு கண்டுபிடிக்க முடிஞ்சுது?   

சுப்புபோலீஸ்காராள் தான் உண்மையான ஹீரோ... நான் வெறும் சயின்ஸ் வர்க்கு தான் செஞ்சேன்...   

பத்திரிகைக்காரர்: பாளைங்கோட்டை சேகர்க்கும் அரங்கசாமிக்கும் நட்பு இருந்ததாக சொல்றாங்களே...அது உண்மையாஉங்க கருத்து என்ன?   

மூர்த்திசம்பந்தமில்லாத கேள்விகள கேக்காதீங்க ப்ளீஸ்...   

(சுப்பு அப்போது மூர்த்தியை பார்த்து சிரித்தான்...)   

மூர்த்திசாரி.. எங்களுக்கு நிறைய வர்க்கு இருக்கு... அப்புறம் வாங்க ப்ளீஸ்... வழி...வழி விடுங்க ப்ளீஸ்...   

பத்திரிகைக்காரர்சார்...சார்.... லாஸ்ட் கேள்வி... ப்ளீஸ்... ப்ளீஸ்....   

மூர்த்தியும் சுப்புவும் அந்த இடத்தை விட்டு சென்றனர்.   

காட்சி நான்கு நிறைவு பெறுகிறது....     
       
காட்சி 5

இடம்உள்துறை அமைச்சர் அரங்கசாமி இல்லத்தில் உள்ள வாசல் சுவரு 
நேரம்மாலை  
கதாபாத்திரங்கள்மூன்று பிச்சைகாரர்கள் (படபிடிப்பில் வருபவர்கள்), சுப்பிரமணியம் 

அரங்கசாமியின் இல்லம் இருந்த தெரு ஆள் நடமாட்டமே இல்லாமல் இருந்ததுசுப்பு அவனுக்கு கிடைத்த காரிலிருந்து கீழே இறங்கினான்.அரங்கசாமியின் வீட்டை பார்த்தபடியே வடிகட்டி சுருட்டை வாயில் வைத்தான்அப்போது அவனுக்கு திரைப்படத்தில் விவேக் சொன்ன வசனம் தான் ஞாபகத்துக்கு வந்தது. "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்என்று நினைத்துக்கொண்டான்வீட்டின் வாசலில் உள்ள பிச்சைகாரர்களை நோக்கி நடந்தான்  
தன் பையிலிருந்து ருபாய் நோட்டு கட்டு இரண்டை எடுத்து ஒரு பிச்சைகாரனிடம் கொடுத்தான்.   

பிச்சைகாரர்கள் அவனை வணங்கசிரித்துக்கொண்டே சுருட்டை சுண்டினான்... கார் கிளம்பியது!   

கொலை செய்தது யார்சுப்புவா? தெரியாதுசுப்புவின் ரவுத்திரத்தின் அதிரடி தான் இதெல்லாம் என்று சொன்னால் நம்புவீர்களா?   

காட்சி ஐந்து நிறைவு பெறுகிறது....