வியாழன், 12 ஜனவரி, 2012

உளறல் I

என்ன கருமமான வாழ்கை சார் இது? எவனுக்கும் எதை பற்றியும் முழுதாக தெரிவதில்லை, ஆனால், நான் தான், நான் தான் என்று பெருமை பீத்திக் கொள்கிறான். வெள்ளைக்காரன் கர்த்தரை கும்பிட்டால் அது ஞாயம், அனால் யானை முகம் கொண்ட ஒரு கடவுளை கும்பிடுகிறவன் முட்டாள். முட்டாள் என்று சொல்பவன் இன்றைக்கு பெரும்பாலும் ஆங்கிலேயன் அல்ல, நம்மூர் மாக்கான் தான். எனக்கு கடவுள் பக்தி இல்லையானாலும் மற்றவனை முட்டாள் என்று கூறுபவர்கள் மீது முதலில் கோபம் வந்துகொண்டிருந்தது, இப்போது பரிதாபம் தான் வருகிறது. "ஐயோ பாவம்" என்ற ஒரு நினைப்பு. "இவனுக்கு என்ன தெரியும் என்று இவன் இப்படி பேசுகிறான்" என்ற பரிதாபமான உணர்ச்சி, ஆணவம் அல்ல.

உயர்தர காபி கடையில் காஞ்சு போன ரொட்டி தின்பவன் சமூகத்தில் நல்ல மரியாதையோடு நடத்தப்படுகிறான், அனால், சாலையோரமாக குழி தோண்டி மின் விளக்குகள் போடுபவனை பார்த்தால் எந்த பெண்ணும் "சீ..உவா..அழுக்கு" என்று நினைத்து கொண்டு அவர்களின் அழகிய முகத்தால் வெளிபடுத்துகிறார்கள். அந்த அறியாமை மூடர்களின் நிலைமையில் நின்று யோசித்தோமானால் ஞாயமாக படுமாம். பட்டாலும் படலாம், தெரியவில்லை. கேவலம். எதற்காக பிறவி எடுத்தோம், என்ன செய்ய வேண்டும் நாம், என்ன செய்து கொண்டிருக்கிறோம், எப்போது எதை செய்ய வேண்டும் - ஒன்றும் தெரியாது எனக்கு, பெரும்பாலும் பலர்க்கு. சமூக ரீதியாக பார்த்தால் இதற்கு பதில்கள் உண்டு, அனால் என்னை உள்நோக்கியோ, என்னையும் விட மோசமான வாழ்கையை மேற்கொளிகரவரை பார்த்தாலோ, இக்கேள்விகள் சட்டென்று எழுகிறது, அனால் பதில்கள் தெரியவில்லை. படு கேவலம். இந்த மன நிலைமையை முன்னோடியாகக்கொண்டு, எனக்கு சில பல கேள்விகள் மனதில்  எழுகின்றன.  அனால் அதை நான் இப்போது செய்ய போவதில்லை. நீங்கள் எல்லாரும் கேள்விகள் கேட்டு கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. கேட்பீர்களா? ஒரு நாள், ஒரு வாரம், இல்லை, ஒரு மாதம் முயற்சி செய்வீர்கள். அதற்கு பிறகு "அட போய்யா..இது ரொம்ப போர்", என்று நிச்சயம் சொல்லுவீர்கள். எல்லோரும் அப்படி இருக்க போவதில்லை. இருந்தாலும் தப்பில்லை, அது உங்கள் இஷ்டம். அனால், முயற்சியாவது செய்யுங்கள்.

ஏதோ ஒரு நாளிதழில் இந்த கட்டுரையை படித்தேன். மிகவும் அற்புதமாக எழுதியிருந்தார் அவர். மற்றவர் வாந்தி எடுப்பதை பார்த்து அருவெறுப்பு கொள்கிறோம். அது ஞாயமாக படலாம். சில சமயம், நாம் எதாவது சாப்பிடுகிறோம், தொண்டை குழாயை தாண்டி வயிற்ருக்குள் போவதற்கு முன்னாடியே நமக்கு வாந்தி வரும்போல தெரிகிறது. அப்போது அந்த உணவுப்பண்டம் வாயில் வந்துவிடுகிறது. அதை மீண்டும் முழுங்குவதில் எதற்கு அருவெறுப்பு? அனால் முக்கால்வாசிபேர் அப்பண்டதை கீழே துப்புகிறோம். இது போன்ற நிறைய எடுத்துக்காட்டுகளை அவர் அந்த கட்டுரையில் கூறியிருந்தார். மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அதுவும் எனக்கு கேள்விகள் கேட்கும் தன்மையை வளர்த்தன. உண்மையை சொல்லப்போனால், வாழ்கை இப்போது சற்று சுவரசியமாகிவிட்டது . என்ன நடந்தது என்பது நமக்கு கொஞ்சம் தெரியலாம்; என்ன நடக்கிறது என்பதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்; என்ன நடக்கக்கூடும் என்பதைபப்  பத்தி நான் கவலை படுவதில்லை. என்ன நடக்கக்கூடும் என்பதைப் பற்றி நான் கவலைப் படுவதில்லை. தினமும் எதாவது புதுசாகத்தான் நடந்துக்கொண்டிருக்கிறது. அப்படியே விட்டுவிடுவதில்லை. அதை பற்றி இணையதளத்தில் தேட ஆரம்பித்துவிடுகிறேன். நேரம் போவதே தெரிவதில்லை. என்ன சுகம். புதுசான மனிதர்களுடன் பழக நேர்ந்தால், அவர்களை கேள்விகள் கேட்டே தொந்தரவுப் படுத்தி விடுகிறேன். அவர்களுக்கு ஆனந்தமாக இருக்கிறதோ இல்லையோ, தெரியவில்லை, எனக்கு அசாத்தியமான ஆனந்தம்.

அதை விடுங்கள். இப்போது ஏதோ தமிழ் மீது அவ்வளவு பற்றும் மரியாதையும் வந்துவிட்டது. புத்தகங்களினாலும், சமூக பிரச்சனைகளினாலும், பரிச்சயதினாலும் இருந்தாலும் இருக்கலாம். தெரியாது. அனால் வந்துவிட்டது. நேரம் போவதே தெரியவில்லை. எதையோ பண்ணிக்கொண்டு இருக்கிறேன். அந்த நிமிடத்தில் செய்ய ஏதோ இருக்கிறது. வேறு எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. நடுக்காட்டிர்க்குள் விட்ட மனிதன் போல ஆகிவிட்டதாக ஒரு நினைப்பு. இது நானே என்னை ஏமாற்றிக்கப் போர்த்திக்கொள்ளும் போர்வையா என்ற கேள்வி எழுவதுண்டு. அதை பற்றி இப்போதைக்கு பேச எனக்கு அருகதை கிடையாது. இந்த நொடி நன்றாக கடந்து சென்றது என்ற சந்தோஷத்தில் வாழ விரும்புகிறேன், நடைமுறையில் நடக்க முயற்சிக்கிறேன். பார்ப்போம், இது எங்கு என்னை கொண்டு செல்கிறது என்று.

அஹம் பிரம்மாஸ்மி!

1 கருத்து: