வியாழன், 12 ஜனவரி, 2012

ஹார்வே டென்ட்டிடம் ஜோக்கர் தமிழில் பேசினால்...

ஜோக்கர் டென்ட்டின் படுக்கையை கையால் தன்பால் இழுத்தான். டென்ட் அவன் கைகளை தனக்கு கட்டப்பட்ட சங்கிலியிலிருந்து விடுவிக்க முயன்றான், முடியவில்லை. ஜோக்கர் பரிதாபமானப் பார்வையோடு...

"நம்ம ரெண்டு பேர் குள்ள எந்த விதமான மனஸ்தாபமும் வர எனக்கு ஆசையே இல்லை ஹார்வே"

லேசாக டெனட்டின் கைப்பிடி சங்கிலிகளை அகற்றினான்..

"உன்னையும் ரேச்சல்லையும் கடத்தினதுக்கப்பரம் அந்த கார்டன் என்ன அவன் கூடரதுல அடிச்சுட்டான் தம்பி.. நான் எதுமே செய்யல..புரி..", டெண்ட்டு குறுக்கிட்டான்.

"ஒன்னோட ஆளுங்க.. ஒன்னோட ஐடியா.."

ஜோக்கர் மேலும் தன் முகத்தை பரிதாபமாக வைத்துக்கொண்டு..

"என் மூஞ்சிய பாரு தம்பி.. இத பாத்தா எதா பிளான் பண்ணி பண்றவன் மாதிரியா தெரியுது? எனக்கு பிளான் எதுவும் கெடயாது தம்பி.. கொலைகாரங்க பிளான் பண்ணுவாங்க.. ஏன்.. போலீசு பிளான் பண்ணுவாங்க.."

எதுவும் பேசாமல் எங்கோ பார்த்தான்..பிறகு..

"நான் எப்டிபட்டவன்னு தெரியுமா ஹார்வே உனக்கு? ஹான்?", அவனது மூச்சுக்காற்று ஹார்வே மீது வீசியது..

"ஓடற கார தொரத்தறவன் நான்.. கார் கடச்சா அத வெச்சு என்ன செய்யணும்ம்னு எனக்கு தெரியாது.. ஏதோ எனக்கே தெரியாம ஏதோ பண்ணுவேன்.. அவ்ளோதான்.. ஒடம்புல வர சொறி மாதிரி.. அவ்வளவே தான்.."

ஹார்வே கூர்மையாக கவனிக்கலானான்..

"எனக்கு இந்த பிளான்..பிளான் பண்ணவே பிடிக்காது.. கருமம்.. உன் ப்ளானா இருக்கட்டும்..எவன் ப்ளானா வேணாலும் இருக்கட்டும்.. மயிருக்குகூட மதிக்கமாட்டேன்.. மரோனி ப்ளான் பண்ணுவான்.. கார்டன் ப்ளான் பண்ணுவான்.. அப்டியே ப்ளான் பண்ணி பண்ணி எல்லாத்தையும் அவனோட பிடீல்ல வெச்சுக்க ஆசை.. செல்பிஷ் பெல்லா.. சுயநலக்காரன்.. ஆனா ஒண்ணு நீ புரிஞ்சுக்கணும் தம்பி.. நான் கார்டன் கடயாது.. கார்டனோட சுயநலத்த வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டு வரதுதான் என்னோட வேல.. எவ்ளோ பைத்தியகாரங்க அவங்கன்னு தெரிய வெக்க ட்ரை பண்ணறேன்..அவ்ளோ தான்.. so நான் இப்போ ரேச்சல்லை முடிச்சது வெறும் தொழில் தான்.. நிச்சயமா.. சுயநலம் இல்ல...புரியும்ன்னு நம்பறேன்..", மீண்டும் ஒரு பரிதாபமான சிரிப்பு..தன் கையில் இருந்த துப்பாக்கியை டென்ட்டிடம் கொடுத்தான்.. டெண்ட்டு வாங்கிக்கொண்டான், ஜோக்கேரின் தலை மேல் குறி பார்த்தான், ஆனால் சுடவில்லை.. ஜோக்கர் சிரித்தான்.. டெண்ட்டு நன்றாக குழம்பி விட்டான்..

"உன் மொகத்துல ஒரு பெரிய சிரிப்ப வரவெக்கட்டுமா தம்பி..?"

2 கருத்துகள்: